பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/377

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 ஆண்பிரிய வாழாது ' போதும் குமுதம், போதும், போதும் ! ’’ அம்பலத்தின் கேவல் அந்த அவல நிலையை அகழ்ந்து காட்டியது. அவரது கரங்கள் அவளைத் தீண்டத் துடித்து நீண்டு நெருங்கின-அந்த ஸ்பரிசத்தின் மூலம் தன் பிழைக்கே கழுவாய்த்தேட விரும்புவதுபோல. ஆளுல்......... குமுதம் தன் சக்தியையெல்லாம் திரட்டிக்கொண்டு முள்ளை மிதித்ததுபோல் துள்ளி விலகினுள். அவளது கண்களிலே சிவந்து சிதறும் சினம், நாசிகளில் வெளிறி உதரும் வெறுப்பு, உதட்டிலே கருத்து வழிந்திடும் கடுமை. மிதிபட்ட நாகம்போல் சீறித் தன் உள்ளத்தையே கக்கி விட்டாள் குமுதம்: என்னைத் தொடாதீர்கள். என் தூய்மையில் உங்கள் மாசை அப்பிக் களங்கப்படுத்தி விடாதீர்கள். நெறி பிறழாது நின்ற ஒருவரின் பாதை திறம்பாத காதலியாக இருந்தேன் என்ற நிம்மதியில் போய்விடுகிறேன். இருவரைத் தொட்டவரை ஏற்க மாட்டேன். ' இது அவள் உள்ளம் மட்டும்தான? ' கற்பு நிலையென்று சொல்லவந்தார். இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப் போம் ' என்று மனிதத்துவம் நிரம்பிய புதுமையின் குரல் அல்லவா. குமுதம் என்ற அந்தச் சிறுபறவை தன் ஆண்மை நிறைந்த ஜோடியைப் பிரிந்த வேதனையில் துடித்து வீழ்ந்து விட்டது. ما يسمم (C بعيد -