பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/378

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னித்துறைவன் 36 கங்கை எரிகிறது கிந்தி சமாதியருகே ஒரு பைத்தியம் அழுகிறது. அழுக் கேறிய காவி உடை. சடை விழுந்த முடி, தாடி ; தோளில் ஒரு ஜோல்ன பை. தூரத்தில் நின்றபடியே பிரஸ் போட்டோகிராபர் ஒருவன் பல கோணங்களில் அவரைப் படம் பிடிக்கிருன், கறுப்பு நாயொன்று சுற்றிச் சுற்றி ஓயாமல் குரைத்துக் கொண்டிருக் கிறது. பின்னணியில் யமுனே. பக்கத்தில் செங்கோட்டை, எதிரில் ஜும்மா மசூதி ! ஆ அற்புதமான காட்சி. ஆணையர் வருகிருர், பைத்தியத்தையும் நாயையும் வெறிக் கிறார். கைகளைப் பிசைகிறார். புருவத்தை நெளிக்கிறார். குறிப் பறிந்த நாலு போலீஸ்காரர்கள் தாடி'யைத் தரதரவென்று இழுத்துப்போய் தூரத்தில் நிற்கும் வானி'ற்குள் ஏற்று கின்றனர். கறுப்புநாயும் குரைத்துக் கொண்டே பின்னல் ஒடுகிறது. *. அடுத்த சில நிமிஷங்களில் சமாதியில் நூறுபேருக்கு மேல் கூடுகின்றனர். கப்பல் கப்பலாய் சாலையை அடைத்துக் கொண்டு கண்ணைப்பறிக்கும் வண்ணங்களில் கார்கள் தூரத்தில் நிற் கின்றன. விதேசித் தூதுவர் ஒருவர், அவரைச் சேர்ந்த ஏழெட்டு பேர், இந்திய உயர் அதிகாரிகள், வில்லையணிந்த அரசாங்கச் சேவகர்கள், பத்திரிகைக்காரர்கள், பாப்' வைத்துக் கொண்டு கறுப்புக்கண்ணுடி அணிந்த பெரிய இடத்துப் பெண்