பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/379

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 கங்கை எரிகிறது கள் எல்லோரும் சமாதியைச் சுற்றி நிற்கின்றனர். விதேசித் தூதுவர் ஒரு பெரிய மலர் வளையத்தை, இரு மெய்காப்பாளர் களின் உதவியோடு, சமாதியில் வைத்துவிட்டு நிமிரும்போது இருபது காமிராக்கள் க்ளிக் அடிக்கின்றன. காலை வெய்யிலில், அங்கு நின்றவர்களின் டெரிலின் உடை கள் தகதகக்கின்றன. வில்லைச் சேவுகர்களைத் தவிர அங்கிருந்த மற்றவர்கள் உடலில் மருந்துக்குக் கூடப் பருத்தி நூலிழை கிடையாது. தூதுவர், மற்றவர்கள் புடைசூழ, ராஜரீகப் புன்னகைகளை உதிர்த்துக் கொண்டே திரும்பிவிட்டார். சத்தமோ, புகையோ ஏதுமின்றி எல்லாக் கார்களும் மாயமாய் மறைந்துவிட்டன. போலீஸ் வானில் ஏற்றியிருந்த அந்தத் "தாடி'யை கீழே இறக்கிவிட்டார்கள். அது மீண்டும் சமாதியருகே வந்து ஓவென்று அழவாரம்பித்தது. கறுப்புநாயும் விடாமல் சுற்றிச் சுற்றிக் குரைத்தது; 응 姜 兴 நாற்பத்து இரண்டாம் வருஷத்திலேயே-ஒருநாள் திண்ணை யில் தேமேன்னு உட்கார்ந்திருந்தவரைப் பிடரியில் கை கொடுத்து தடதடவென்று வெளியே தள்ளிக் கொண்டு போய், * நீ காந்தி பக்தன்தானேடா ? ’’ என்று கேட்டு, ஒரு காரணமு மில்லாமல் மண்டையில் மடேர் மடேரென்று குண்டாந்தடி யால் போலீஸ்காரர்கள் அடித்து நொறுக்கியபோதே-அவருக் குப் பைத்தியம் பிடித்திருக்க வேண்டும். ஆனல், ஒரு வெள்ளி விழாக்காலம் தள்ளி, அறுபத்தெட்டில் தில்லியின் பொசுக்கும் கோடையில், காந்தி சமாதியினருகில் வந்து பித்துப் பிடித்தாற் போல் அவர் அழுவார் என்று யாருக்குத் தெரியும் ? 特征 晏 兴 கும்பகோணத்திற்குத் தெற்கே எட்டாவது மைலில் இருந்த ஒரு கிராமத்தில் கோவிந்த தீட்சிதருக்கு விட்ட சீட்டு சென்று கொண்டிருந்த காலம் முப்பாட்டனர் செய்த வாஜபேய' யாகத்தினால், "ஒசி"யில் கிடைத்த தீட்சிதர் என்ற விருது, சந்தியாவந்தனம் கூட ஒழுங்காகச் செய்யாத கோவிந்தனின் பெயரோடு ஒட்டிக் கொண்டது. விருதோடு வந்த பிதுரார்ஜிதத் தில், ஐந்து வேலி நிலம், நாலு ஒட்டு வீடு, இரு வில் வண்டி, ஒரு ரேக்ளா யாவுமிருந்தன. எடுபிடிகள், ஆமாஞ்சாமி விற்பன்னர் கள், மூனுசீட்டு ஜமா, ஆகியவர்களின் உறவு போதாமல்,