பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி அன்னையும் பிதாவும் சேலம் ஜில்லா கோக்கலையைச் சேர்ந்த அர்த்தநாரி என்ற ஹரிஜன வாலிபன், பூரீயுத மல்கானியுடன் டில்லிக்குப்போனன். பூரீயுத மல்கானி அகில இந்திய ஹரிஜன சேவா சங்கத்தின் காரியதரிசி, தென்னுட்டில் சுற்றுப் பிரயாணத்திற்காக வந்தவர், சேலத்தில் இப் பையனைக் கண்டு வெகு சந்தோஷப்பட்டுத் தம் கூடவே டில்லிக்குக் கூட்டிக்கொண்டு போய்விட்டார். அங்கே அவனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்து, ஆறு வருஷம் தம் வீட்டி லேயே வைத்துக்கொண்டு அவனை மிக்க அன்போடு பார்த்து வந்தார். பிறகு டில்லியிலேயே ஒரு பிரபல வியாபாரக் கம்பெ னித் தலைவருக்குச் சொல்லி அந்த ஆபீசில் மாதம் அறுபது ரூபாய் சம்பளத்தில் ஓர் உத்தியோகத்தில் அவனைச் சேர்த்தார். பார் வைக்கு ஆள் நன்முக இருந்ததோடு, வேலையில் யோக்கியமாக வும் சுறு சுறுப்பாகவும் இருந்தபடியால், வெகு சீக்கிரமாகச் சம்பளம் உயர்ந்தது. இருபத்துநாலு வயது ஆகுமுன் மாதம் நூற்றைம்பது ரூபாய் சம்பளமாயிற்று. கொஞ்ச காலத்திற்குப் பிறகு, பெங்களூரில் அதே கம்பெனியைச் சேர்ந்த பெரிய நெசவு மில்லில் ஒரு வேலை காலியாயிற்று. மாதம் இருநூறு ரூபாய் சம்பளம். அதற்கு அர்த்தநாரியை அனுப்பினர்கள். பெங்களுர் போய் அந்த வேலையில் அமர்ந்து, அவன் இரண்டு வருஷம் சந்தோஷமாகக் கழித்தான். அர்த்தநாரிக்கு அடுத்த மேல் உத்தியோகஸ்தரின் பெயர் கோவிந்தராவ். இவர் சீமைக்குப் போய் மான்செஸ்டரில் இரண்டு வருஷகாலமிருந்து பயிற்சி பெற்றவர். அவரும் அர்த்தநாரியும் ஏறக்குறைய சம வயது. அர்த்தநாரியின் குணமும் நடத்தையும் அவருக்கு மிக வும் பிடிக்கவே, இருவரும் நெருங்கிய நண்பர்களானர்கள். கோவிந்தராவுக்கு ஒரு தங்கை பங்கஜம், தமையனும் தங்கையும்