பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/380

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னித் துறைவன் Ꮌ T 5 கும்பகோணத்துக் கனகாங்கியின் அந்தரங்க உறவையும், சேர்த்துக் கொண்டான் கோவிந்தன். வாரத்தில் மூன்று நாட்கள் ரங்காட்டம். இரவையும் பகலையும் பிரித்துக்காட்ட, பரிசாரகன் வெள்ளிக் கூஜாவில் கொதிக்கக் கொதிக்கக் கொண்டு வந்து வினியோகிக்கும் காப்பிதான் சாட்சி. கீழண்டை வீட்டுத்திண்ணை யில் மும்முரமான நிசப்தம் நிலவும். பேச்சே இருக்காது. தபஸ் செய்வது போல் எல்லோர் முகத்திலும் ஒரு உக்ரம் கலவை'யின் போது புகையிலையைத் துப்பத்தான் நேரமிருக்கும். துப்பாமல் விழுங்கும் வான்கோழிகளும் சில இருந்தன. கால்கடுக்க நின்று, கைகள் இற்று விழுவதுபோல் ஒருவன் பங்கா இழுத்துக் கொண்டிருப்பான். வாரத்தில் மற்ற நாட்களில் தீட்சிதர் கும்பகோணத்திலிருப் பார். “ இப்படி ராக்கண் முழிச்சா ஐயா உடம்பு என்னத்துக்கு ஆகும்?” என்று கனகாங்கி கரிசனம் பொங்கக் கூறுகையில், தீட்சிதருக்கு உடல் அசதியெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் பறந்துவிடும். ' கனகு, உடம்பு, உடம்புன்னு புலம்பிகிட் டிருந்தா, போகும்போது உடம்பைக் கூடவாத் தூக்கிட்டுப் போப்பருேம் ? ஏதோ, இருக்கிறவரையில் அனுபவிக்க வேண் டியது. அது கெடக்குது. உன் கையாலே இரண்டு வேளை கண்டந்திப்பிலி ரஸம் வச்சுப்போடு. உடம்பு கலகலன்னு ஆயிடும் !’ - தீட்சிதருக்கு உடம்பில் நல்ல தெம்பு இருந்தது. கையில் பசையிருந்தது. வாழ்க்கையின் உயர்ந்த ரஸனைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள அவர் விழையவில்லை. கனகாங்கிக்கு அவள் தொழிலுக்குத் தேவையான அத்தனை லக்ஷணங்களுமிருந்தன: எந்தெந்த வேளையில் எதைச் செய்ய வேண்டுமென்ற அபூர்வமான தேர்ச்சி. இந்த ஊர்லே இருக்கற அத்தனைப் பெண்களும், கல்யாணமாகறத்துக்கு முன்னே உங்கிட் டப் பத்து நாள் ட்ரெய்னிங் எடுத்துக்கிட்டுப் போவனும் கனகு ' என்பார் தீட்சிதர். அப்பேற்பட்ட தீட்சிதரின் வாழ்வில் ஒருநாள் தீடீரென்று ஓர் அதிசயம் நிகழ்ந்தது. இரவோடு இரவாகத் தீட்சிதர் புனர் ஜன்மம் எடுத்துவிட்டார். நவீன நாகரிகத்தின் நிழலைக்கூட மிதிக்காமல் இருந்ததாலும், படிப்பு வாஸ்ன அறவே இல்லாமல் இருந்ததாலும், குயுக்தியினல் அயோக்யத்தனத்தைக் கூடக் கலாச்சாரமாக்கிவிடும் நகர வாழ்க்கையிலிருந்து விலகி வாழ்ந்த தாலும், அவருக்கே இயல்பான கிராமிய வெகுளித்தனம் தீட்சி தரைப் பூரணமாக ஆட்கொண்டது;