பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/381

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 கங்கை எரிகிறது ரங்காட்டம், கனகாங்கியின் உறவு யாவற்றையும் தீட்சிதர் ஒருங்கே துறந்தார். சொத்து முழுவதையும் கனகாங்கிக்கு எழுதி வைத்துவிட்டு, கதர் வேஷ்டியும் துண்டுமாகச் சேரியின் நடுவில் ஒரு குடிசையைப் போட்டுக் கொண்டார். தோட்டிக ளோடு இவரும் தெருக் கூட்டினர். குஷ்டரோகிகளுடன் உழன்ருர். கையில் கொடியேந்தி கள்ளுக் கடையில் போய் மறியல் செய்தார். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருநீறு அணி வித்து தானும் தனக்குரிய ஜபதபங்களில் மூழ்கினர். வெற்றிலை யைத் துறந்தார். சுயம்பாகம் ஆரம்பித்தார். அவரது குடிசைச் சுவரில், மகாத்மாவின் படத்திற்கடியில் சில வரிகள் வருவோரின் கவனத்தை ஈர்த்தன : எனது தகப்பனர் எமனுடன் போராடும் வேளையில் நான் அடுத்த அறையில் என் மனைவியுடன் பருவ மழையில் திளைத்துக் கொண்டிருத்துவிட்டு, அவர் உயிரிழக்கும் தரு வாயில் பக்கத்தில் இல்லாதிருந்த வெட்கக்கேட்டை ஊரறியச் சொல்லி அழுதால்தான் நான் செய்த பாவம் தொலையும். உடலுறவு மோகத்தினல் ஆத்மாவைத் துருப்பிடிக்க வைத்துவிடும் எல்லோருக்குமே இது பாடமாக இருக் கட்டும்,' கோவிந்த தீட்சிதரை மீண்டும் பிராமணனுக்கிய வாசகம். கனகாங்கியின் வீட்டிலிருந்து திரும்பும் போது ஒருநாள், வழியில் வண்டியை நிறுத்தச் சொல்லி, பட்டாணிக் கடலை வாங்கச் சொன்னர். கடலையைத் தின்றுவிட்டு, காகிதத்தைக் கசக்கி எறியாமல் படிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது, முப்பாட்டனர் செய்த வாஜடேய யாகத்தின் பலனே, அல்லது இவரே பூர்வஜன்மத்தின் விட்டகுறை தொட்ட குறையாக இத்தனை நாள் போக வாழ்வு வாழ்ந்துவிட்டு அவ்வினையிலிருந்து விடுபட வேண்டிய காலம் வந்துவிட்டதோ, தெரியாது; வண்டி யைத் தெரு விளக்கொளியில் நிறுத்தச் செய்தார். காகிதத்தி லிருந்த வரிகளை ஒருமுறை படித்தார்; இருமுறை படித்தார். படித்துக் கொண்டேயிருந்தார். கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. 'மகாத்மா, மகாத்மா என்று வாய் புலம் பிற்றும் அவ்வளவுதான். கணிரென்ற குரலில் தீட்சிதர் டேய் ! வண்டியை ஆத்துப்பக்கமாக் கொண்டு போடா !” என்ருர்: வண்டி காவிரியை அடைந்தது. தீககிதர் இறங்கி, நீரில் கிழக்கே பார்த்து நின்று கொண்டு அவசர அவசரமாக மூன்று