பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/382

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னித் துறைவன் 377 முழுக்குகள் போட்டார். பிறகு விருட்டென்று, ஈரத்துணி யுடனேயே வண்டியில் ஏறிக் கொண்டு, ' என்னைப் புடிச்ச சனியன் இன்னியோட விட்டுதுடா, விடு வண்டியை ! " என்ருர். பிரக்ருதியின் இடையரு இயக்கத்தின் வேகத்தில் பிசிரில் லாமல் ரீங்காரம் செய்யும் லோகச்ருதியோடு, தனிமனிதனின் அடிமனத்தில் சீந்துவாரின்றிச் சுருண்டு கிடக்கும் ஆத்ம ஒலி, ஏதோ ஒரு தருணத்தின் தவப்பயனல் மீட்டப்பட்டு இழையும் போது, வாழ்க்கையின் சுருதி சுத்தமாகிவிடுகிறது. இசையற்ற, சுருதியற்ற, ஆத்ம ரஸ்னேயற்றக் கடந்தகாலக் கட்டாந்தரை வாழ்க்கை கெட்ட சொப்பனம் போல் அர்த்தமற்றதாகி, கண் களைக் கசக்கிக் கொண்டு வாழ்க்கையில் முதல் முதலாகச் சூரியோதயத்தைப் பார்ப்பது போன்ற ஓர் இனிமையான அனுபவம் ஏற்படுகிறது; எட்டு வயதில், பூணுால் போட்ட காலத்தில், வெள்ளித் தாம்பாளங்களில் பிrை அரிசியுடன் பெண்கள் சூழ, கோவணுண்டியாக மணையில் நின்று கொண்டு, பட்டு அங்க வஸ்திரப் போர்வையின் மறைவில், தகப்பனர் காதில் ஒதிய பிரம்மோபதேசத்தின்போது, பிராமணனுகாத கோவிந்தன், முப்பது ஆண்டுகள் கழித்து, நடுத்தெருவில், மறைவற்ற தெரு விளக்கின் மங்கலில், பட்டாணிக் காகிதத்தில் தெரிந்த சில வரிகளினால், பிரம்மணியத்தை-பிரம்மச்சரியத்தை-ஒரே தாவில் பிடித்துவிட்டார். தீட்சிதரின் செய்கைகள் யாவரையும் பிரமிக்க வைத்தன. சிலரைக் கிண்டல் செய்யவும் வைத்தன. மரைலூஸ் ' என்று நக்கல் செய்தனர். அவர்களது கேலி வார்த்தைகள் தீட்சிதர் செவிகளுக்கும் எட்டின. ' உள்ளுணர்வின் புலம்பலினல் பத்ரம் கழன்று லூஸ் ஆகும் போதுதாண்டா, மனுஷனின் போலிச் செதிள்களெல்லாம் உதிர்ந்து போகின்றன. தளைகளை அறுத்துக் கொண்டு உள் பிரக்ஞை வீறுகொண்டு எழும் போது, உலகமே அதற்குள் அடக்கம். தனித்துநின்று அவ்வெழுச்சியைப் பைத் தியக்காரத் தனம் என்று சொல்ல யாருக்குடா யோக்யதை இருக்கு ? ' என்று தீட்சிதர் பொதுப் படையாகச் சொல்வார்; தீட்சிதரின் பாஷையின் உட்கருவைச் சேரிமக்கள் அறிந்தார் களில்லை. ஆனல் அந்த அறியாமையே, அவர்கள் தீட்சிதர் பால் கொண்டிருந்த பக்திக்கு, ஆனைபலமாக நின்றது. ; மஹாத்மாவை தீட்சிதர் நேரில் பார்க்கவில்லை. விழையவும் இல்லை. அந்தப் போர்பந்தர் யோகியைத் தரிசனம் செய்ய லசுக்கணக்கில் ஜனங்கள் கும்பகோணம் ரயிலடியில் நெரியும்