பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/383

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

373 கங்கை எரிகிறது போது, இவர் காவிரிப் படித் துறையில் உட்கார்ந்து கொண்டு ஜபத்தில் மூழ்கியிருந்தார். பிறகு, ' என்ன இப்படிப் பண்ணிட் டீங்களே? என்று இவரைத் துக்கம் விசாரிப்பது போல் பாரோ கேட்ட போது, தீட்சிதர் சொன்னர் : “ ஐயா, அவர் என் தெய்வம். தெய்வத்தை நேரில் பார்த்துட்டா ஒரு மாத்துக் கொறச்சல்தான். கண்ணுலேபடாம ரகஸியமா இருக் கிறவரையில் தான் தெய்வம், நான் அவரைத் தெய்வமாகவே பூஜிக்க விரும்புகிறேன் ! ' 1948 ஜனவரி முப்பது, வெள்ளிக்கிழமை. தீட்சிதரின் தெய்வம், மனித உடலை நீத்து, எல்லோருக்குமே கண்ணுக்குத் தெரியாத தெய்வமாகி விட்டது. வானெலியில் ஷெனயின் அழுகையும், பாபுஜி, பாபுஜி என்ற கதறல்களும், அதைக்கேட்டு மயக்கம் போட்டு விழுந்தவர்களும், வீதியில் புரண்டு அழுதவர் களுமாக, நாடே சோக அவலத்தில் மூழ்கியிருந்த போது, தீட்சிதர் ' ராமா, ராமா' என்று கதறிக் கொண்டிருத்தார்; சாமி 1 குழந்தேங்க கூட சாப்பிடாம அழுவுதுங்க சாமி ! இந்தக் கண்ருவியை வந்து பாருங்களேன். ! ' என்று யாரோ வந்து தீட்சிதரிடம் முறையிட்டபோது, ' குழந்கைள் கூட அழறதா ? எல்லோரும் அழருங்களா? அழட்டும்டா. நன்ன அழட்டும்டா......' சாமி ! தாங்க முடியவீங்களே !' தீட்சிதர் பளிச்சென்று அழுகையை நிறுத்தினர். பிறகு ஏதோ ஆவேசம் வந்தவர்போல்,

  • மனுஷன் ரேடியோவை, டெலிபோனை, டெலிவிஷனை எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டு, தொலைவை வென்று உலகத் தையே சுருக்கிட்டதாக மார் தட்டரு:ன். ஆனால், இவன் கண்டு பிடிக்காத ஒன்று, இவனுக்குள்ளேயே இருந்துண்டு, தொலைவை யும் சுருக்கி, மனசையும் விசாலமாக்கக் கூடிய தெய்வ மருந்தா அமைஞ்சு போயிடுத்து. அது என்ன ? தெரியுமாடா ? '

வந்தவன் இவர் பேச்சையே லட்சியம் செய்யாமல் அழுது கொண்டிருந்தான். தீட்சிதரும் அவன் அழுகையை லட்சியம் செய்யாமல் பேசிக்கொண்டே டோனர். ! நீயும் நானும் இப்ப அழருேமே, அதுதாண்டா அந்த மருந்து, அழுகைதாண்டா ஞானம். கோடிக்கணக்கான உள்ளங் களை ஒரு நிமிஷ்மேனும் அழுது உருக வைத்து விடறவன் மகாத்மா. நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. நான் ஏண்டா அழறேன் ? நீ ஏண்டா அழறே ; இந்த வேளை தெய்வ வேளை, உலகத்துலே ஒவ்வொரு நிமிஷமும் எல்லோரும் உருகி