பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/384

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன்னித்துறைவன் 379 அழுதுண்டேயிருந்தா மனசறிஞ்சு ஒரு பாவத்தைச் செய்யத் தோணுமாடா ? ’’ இதைச் சொல்லிவிட்டு தீட்சிதரும் ஓவென்று அழுதார். அடுத்த நாளிலிருந்து தீட்சிதர் அந்தக் கிராமத்தில் இல்லை. வடக்கே தபஸ் செய்யப் போய்விட்டதாக எல்லோரும் பேசிக் கொண்டனர், 张济 带 இருபது வருடங்கள் கழித்து, ஹிமாலயத்தின் ஏதோ ஒரு பகுதியிலிருந்து தீட்சிதர் வெளியே வந்தபோது, கங்கை எரிந்து கொண்டிருந்தது. மண்ணெண்ணெய் கங்கை நீருடன் கலந்து விட்டதால் எரிகிறது என்று எல்லோரும் வாளாவிருந்தனர். யாரும் பதறி அழவில்லை. தெய்வகுத்தமாக இருக்குமோ? என்று பயப் படும் பத்தாம்பசலி அஞ்ஞானத்தில் யாரும் உழலவில்லை. கல் பாந்த காலமாக இக்கர்ம பூமியின் பாவத்தையெல்லாம் அலுக் காமல் சுமந்து கொண்டு, ஞானிகளையும், தெய்வக் கவிஞர்களை யும், உபநிஷதங்களையும் வேதங்களையும், இராமரையும், மஹாத் மாக்களையும் ரிஷிகளையும், தனித்வம் மிக்க ஒரு கலாச்சாரத்தை யும் இந்நாட்டுக்கு ஈந்த அந்த ஹிமவான் புத்ரிக்கு நேர்ந்த தீவிபத்தை மிகச் சாதாரண விஷயமாக்கி, அதற்காக ஒரு சொட்டுக் கண்ணிர் கூட வடிக்காத இந் நாட்டுமக்களின் ஆன்மீக வரட்சியை நினைத்து, தீட்சிதருக்குப் பகீரென்றது. நாட்டு மக்கள் ஏதோ அபச்சாரம் செய்து விட்டதால் தான் இப்படி ஒரு விபத்து நேர்ந்து விட்டது என்று அவரது பழமையான கிராமிய அறிவு குத்திக்காட்ட, அடிவயிற்றின் குமைச்சலின் உந்தலில் என்னதான் நேர்ந்து விட்டது என்ற வேட்கை மிக, பதறும் நெஞ்சத்துடன் அவர் ஊர் ஊராகச் சுற்றிய போது- . நகரங்களிலும், கிராமங்களினும், பட்டி தொட்டிகளிலும் இருவிதமான நச்சரவுகள் ஊர்ந்து நெளிவதைக் கண்டார். அதிகார மோஹமும், சினிமா மோகமும் மக்கள் ரஸ்னையை, சிந்தனைத் தெளிவை, தியாகத்தை நேர்மையை, கற்பை, நாண யத்தை, யோக்யப் பொறுப்பை எல்லாவற்றையும் எவ்வளவு தூரம் அரித்திருக்கிறது என்பதைப் பார்த்தார். 'வந்தே மாதரம் ! '-தாயை வணங்குகிறேன்-என்ற, இதயத் தரத்தை யும் அடக்கத்தையும் உணர்த்தும் அஞ்சலி கோஷம் போய்,