பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/385

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 கங்கை எரிகிறது வாழ்க்கைத் தரம் ' என்ற உடலைச் சார்ந்த வரட்டுக் கோஷம் வளர்ந்திருப்பதைப் பார்த்தார். ஜாதிப் பூசல்களிருந்த இடத்தில் காட்சிப் பூசல்களைப் பார்த்தார். அரசியல் பதவிகளுக்காக அடுத்துக் கெடுக்கும் கயமையைப் பார்த்தார். புனிதக் கொள்கைகள், இலட்சியங் களிலிருந்த பிடிப்பு விட்டுப் போய், எரிகிற வீட்டில் பிடுங்கிய வரையில் ஆதாயம் ' என்ற வெறித்தனம் எல்லாத் துறை களிலும் வியாபித்திருப்பதைக் கண்டார். ரகஸியமாகவும், பகிரங்கமாகவும் உடலுணர்ச்சிகளின் தேவையைப் பெரிது படுத்தி, அத்தேவைக் கேற்ப, கற்பின் இலக்கணத்தையே இழுத்த இழுப்புக்கு வரும் படியாக மாற்றியமைத்து, குடும்பம் என்ற சமூக ஆணிவேரையே அறுக்கும் ஒரு புதிய நாகரிகத்தைப் பார்த்தார். மக்களின் நடை, உடை, பாவனைகளின் பால் உணர்ச்சியைப் பொங்க வைக்குமாறு கையாளும் சாமர்த்திய மான புதிய யுக்திகளைப் பார்த்தார். பஸ்ஸில் ஏறுவதிலிருந்து, அமைச்சரவையில் ஸ்தானம், பிடிப்பது வரையில் நடக்கும் ஒரே மாதிரியான குடுமிபிடிச் சண்டை'யைப் பார்த்தார். சத்தியம் செல்லாக் காசாகி விட்டதைப் பார்த்தார். ஆன் மீகம் அர்த்தமற்றதாகி விட்டதைப் பார்த்தார், ஆமையுள்ளங் களைப் பார்த்தார். சிறுமையைக் கண்டு துடிக்காத தோள்களைக் கண்டார். மக்களின் சிந்தனை, உடை, நடவடிக்கைகள் எதிலுமே இந்த மண்ணின் முத்திரை இல்லாமலிருப்பதைப் பார்த்தார். உருகி அழக்கூடிய ஞானத்தைக் கூட மனிதர்கள் இழந்து விட்ட தாகத் தோன்றியது, தீட்சிதருக்கு. கடைசியாக தில்லிக்கு வந்து சேர்ந்தார். காந்தி சமாதி யின் அருகில் போய் ஓவென்று தேம்பித் தேம்பி அழுதார் ) பாபுஜி கங்கை எரிகிறது. இம்மண்ணின் அன்னை எரி கிருள். சத்தியம் எரிகிறது. தெரியவில்லையா உங்களுக்கு? வாருங்கள், இன்ைெரு முறை வாருங்கள். இன்னும் ஆயிரம் முறை வாருங்கள்......மீண்டும் மீண்டும் இம்மண்ணில் பிறந்து எங்களை மனிதர்களாக்குங்கள்......... அண்ணலே ! சமுத்திரத்தில் பெருங்காயத்தைக் கரைத்ததுபோல், இந்நாட்டிற்கு ஒரு காந்தி எப்படிப் போதும்? 'வாருங்கள்...மீண்டும் மீண்டும் வாருங்கள்.........' . தீட்சிதர் அழுது கொண்டேயிருந்தார். கறுப்பு நாய் ஓயாமல் குரைத்துக் கொண்டேயிருந்தது. - பின்னணியில் யமுனை, பக்கத்தில் செங்கோட்டை, எதிரில் ஜும்மா மசூதி ! . . ஆ அற்புதமான காட்சி!