பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/386

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் 37 சத்திய சோதனை 'உன் கோத்திரம் என்ன என்று உன் தாயிடம் கேட்டுவா’ என்று குரு அனுப்பி வைத்ததும், மகனே, உன் குலம் கோத் திரம் எதையும் நான் அறியேன். இளமையில் நான் பல இடங் களிலும் வேலை செய்து பிழைத்தபோது, உன்னைக் கருவுற்றேன்: நீ பிறந்ததும், உனக்கு சத்யகாமன் என்று பெயரிட்டேன். நீ ஜாபாலை மகன். இதையே உன் குருவிடம் சொல்லு என்று ஜாபாலை தன் மகனுக்கு அறிவித்தாள். அப்படியே அவன் முனிவரிடம் சொன்னன்; ' சரி. இனி நீ ஜாபாலை சத்யாகமன் என அழைக்கப்படுவாய் ' என்று குரு தெரிவித்தார். வாழ்க்கை இருளில் ஆன்ம ஒளியோடு உண்மையைத் தேடித் தவமிருந்த முனிவர்கள் சத்தியத்தை கெளரவிக்கத் தவறியதேயில்லை. சதானந்தத்துக்கு மன உளைச்சல் ஏற்பட்டிருந்தது. அவ ருடைய வாழ்க்கையில் மற்றும் ஒரு சோதனை சாதாரண மனிதனின் வாழ்விலும் எத்தனையோ சோதனை கள் குறுக்கிடத்தான் செய்கின்றன. சிரமங்களைச் சகித்துக் கொண்டு அவற்றில் வெற்றி பெறுவதோ, அல்லது அவற்றினல் அமுக்கி அழுத்தப்படுவதோ அவரவர் மனத்திண்மையைப் பொறுத்தது. . சதானந்தத்துக்கு மன உறுதி மிகுதியாக இருந்தது. வாழ்க்கை உலைக்களத்தில், அனுபவத் தீயில் காய்ந்து, இந்தன. பயிற்சி முதலிய சம்மட்டிகளினல் அடித்துத் தன்னையே ஒரு வாறு பூதப்படுத்திக் கொண்டவர் அவர், - -