பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/387

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 2 சத்திய சோதனை அவ்வாறு அவர் தேர்ந்து தெளிவடைவதற்கு அவருடைய தாய் லட்சுமி அம்மாளும் முக்கிய காரணம்தான். அவளே அவருக்கு நல்லாசாளுகவும், சிறந்த வழிகாட்டியாகவும், பக்க பலமாகவும் இருந்து வந்தாள். தன் மகன் நல்லவகை வாழ வேண்டும், சான்ருேளுகத் திகழவேண்டும், என்று அவள் ஆசைப் பட்டாள். பிள்ளைப்பிராயத்தில் சதானந்தம் பிழைகள் புரிந்த போது, பொய்கள் சொல்லத் துணிந்தபோது, அவள் அன்பின லும் கண்டிப்புகளிலுைம் திருத்தி, நல்வழிப்படுத்தத் தவறியதே யில்லை. பொய் சொல்லக் கூடாது, எப்பொழுதும் சத்தியத்தையே கடைப்பிடிக்க வேண்டும் என்று அவள் தன் மகனுக்கு வற் புறுத்தி வந்தாள். நீதிக் கதைகளையும், பெரியோரின் வரலாறு களையும் அவள் அவனுக்கு எடுத்துச் சொல்லி, உண்மையின் உயர்வை இளம் உள்ளத்தில் நன்கு பதியவைத்தாள். அவதார புருஷர்களும் அருள் ஞானிகளும் தான் உயர்ந்த கொள்கைகளைக் கையாள முடியும் என்று எண்ண வேண்டியதில்லை; மக்கள் மத்தி யில், அவர்களோடு கலந்து, அவர்களில் ஒருவராக வாழும் மனிதனும் சத்தியம், அன்பு, அகிம்சை முதலிய சிறந்த பண்பு களே நன்கு அனுஷ்டிக்க முடியும் என்று கூறி, அவள் காந்திஜீயை அடிக்கடி உதாரணமாகக் காட்டி வந்தாள். இதல்ை எல்லாம் சதானந்தத்தின் உள்ளம் நன்கு புண்பட்டு வந்தது. என்ருலும், அவ்வப்போது சிறு சிறு சபலங்கள் அவரை வழி விலகத் தூண்டுவதும் உண்டு. மனிதன் பலவீனங்கள் உடையவன் தானே ? பிறகு அவருடைய மனமே அவரைக் குறை கூறி, அமைதி யற்றுத் தவிக்கச்செய்யும். அவர் தன் பிழைக்காக உளமாற வருந்தி, உண்மையை அறிவித்துப் பரிகாரம் தேடிகொண்ட பின்னரே, இயல்பான அமைதியையும் மனமகிழ்ச்சியையும் அடை Gł##7 fr. " - . பள்ளிப் பருவத்தில் சதானந்தம் செய்த குற்றம் ஒன்று என்றும் அவர் நினைவில் அழுத்தமாகப் பதிந்து கிடந்தது. அந் நாளையிலேயே, தாயின் உபதேசப்படி அவர் உண்மையை ஒப்புக் கொண்டு ஆவன செய்துவிட்ட போதிலும், அச் செயல் உறுத் தும் ஓர் அனுபவமாய் அவர் உள்ளத்தில் நிலைபெற்று நின்றது. அப்போது சதானந்தத்துக்குப் பதிமூன்று வயது. அவன் படிப்பில் ஆர்வமும் ஆற்றலும் உடைய மாணவனுகத்தான் இருந்தான். ஆயினும், ஒரு பரீட்சையில் ஒரு பாடத்தில் கடுமை யான கேள்விகள் வரும் என்று அவனுக்குத் தெரிந்த போது, அவன் நேரிய வழியில் செல்லாமல், சுருக்கு வழியில் மிகுதியான