பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 383 மதிப்பெண்கள் பெற ஆசை கொண்டான். விடைகளை சாமர்த் தியமாக எழுதி எடுத்துச் சென்று, திறமையாகப் பார்த்தெழுதி, திருப்தி அடைந்தான். முடிவில், நல்ல மார்க்குகளும் பெற்று விட்டான். - மிகப்பலர் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருந்தபோது, அவன் மிகுதியான மார்க்குகள் பெற்றுச் சிறப்பாக விளங்கு வதைக் கண்டு பலர் அவனைப் பாராட்டினர்கள். இயல்பாகவே அவன் திறமைசாலி என்பதையும், படிப்பில் அவன் காட்டும் ஊக்கத்தையும் உழைப்பையும் எல்லோரும் நன்கு அறிந்திருந்த தல்ை, யாரும் அவனை சந்தேகிக்கவில்லை. பிறகு ஒரு நண்பனிடம் அவன் இதை விளையாட்டாகவும் பெருமையாகவும் சொல்லிக் கொண்டிருந்தது அவன் தாய் காதில் விழுந்தது. அவள் அவன் செய்தது குற்றம், அதை எண்ணிப் பெருமை கொள்வது தவறு என்று சுட்டிக் காட்டினுள். சத்தியத்தைப் பெரிதென மதித்த அவள் தன் மகனுக்கு இட்ட கட்டளை அவனுக்குக் கசப்பாகத் தான் இருந்தது. ஆனலும் அவன் அதைச் செய்தே தீரவேண்டும். சதானந்தம் தயங்கித் தயங்கித் தன் ஆசிரியரை அணுகி ஞன் தான் செய்த குற்றத்தையும், தாயின் கண்டிப்பையும், அவரிடம் ஒப்புக்கொண்டான். நல்ல பையனை நீ இப்படி ஏமாற்றலாமா? உன் தவறுக்காக நீயே வருந்துவது சரி. இதைத் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டியது என் கடமை என்று கூறி, அவர் அவனையும் அழைத்துக்கொண்டு போனர். தலைமை ஆசிரியரின் கண்டிப்பும் கடுமையான குணமும் பள்ளிக்கூடம் முழுவதும் பிரசித்தி பெற்றிருந்த விஷயம். அவர் முன் செல்கையிலேயே சதானந்தத்துக்கு உள்ளப் பதைபதைப் பும் உடல் நடுக்கமும் உண்டாயின. எனினும், ஒருவாறு உண் மையை ஒப்புக்கொண்டு, தன் தாயின் கருத்தையும் தெரிவித் தான். என்னை மன்னியுங்கள். இனிமேல் நான் ஒருபோதும் இப்படிக் குற்றம் செய்யமாட்டேன் என்றும் சொன்னன். தலைமை ஆசிரியர் ஊம் என்று உறுமினர். மெளனமாக அவனை நோக்கினர். அவர் என்ன தண்டனை தருவாரோ என்று அஞ்சி நின்ருன் அவன். 'நீ செய்தது பெரிய தவறு. அதற்காக உன்னை பெயிலாக்க வேண்டும். இருந்தாலும், நீ உன் குற்றத்தை உணர்ந்து, உண் மையாகவே வருத்தப்படுகிருய். உன் அம்மா நல்லவள், உன் தவறை எடுத்துக்காட்டி உன்னை நல்வழிப்படுத்தத் தயங்காதவள் என்று தெரிகிறது. அந்த அம்மாளுக்காகவும், நீ உன் தவறை