பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/389

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 சத்திய சோதனை எண்ணி வருந்துவதனலும், இந்தத் தடவை உன்னே மன்னித்து விடுகிறேன். இனி இதுபோல் நடக்காதே 1 என்று கண்டிப்புக் குரலில் பேசினர் அவர். அன்றிலிருந்து சத்தியத்தின் மீது அவன் மிகுந்த பற்றுதல் கொண்டான். அதற்கு இப்போது ஒரு சோதனை வந்திருந்தது. 2 அன்பு, அகிம்சை, அறம் ஆகியவை மனிதருக்கு மாண்பு அளிக்கும். வாழ்க்கை இருளில் ஒளிதேடித் திரிந்து, மக்கள் அனைவருக்கும் வழிகாட்ட முன்வந்த உத்தமர்கள் - புத்தர், ஏசு, வள்ளுவர் போன்ற - அனைவரும் சத்தியத்தைச் சிறப் பித்துச் சொன்னர்கள். மனிதருள் உயர்ந்தோர் வகுத்துக் காட்டிய வழியில், கொள் கையில் உறுதியான பிடிப்புடன் வாழ்க்கை நடத்தத் துணிகிற சாதாரண மனிதரின் அன்ருட வாழ்வில் சிரமங்களும் தொல்லை களும் ஏற்படத்தான் செய்கின்றன. இதைச் சதானந்தம் நன்கு புரிந்துகொண்டார். ஆரம்ப நாட்களில், அவர் மனசில் இருந்திருக்கக்கூடிய சஞ் சலங்களும் சலனங்களும் அகன்று தெளிவு பிறப்பதற்கு அவரு டைய தாய் பெரிதும் உதவிள்ை. - - லட்சுமி அம்மாள் தன் வாழ்நாட்களில் வறண்ட கோடை வெயிலேயே மிகுதியாக அனுபவித்திருந்தாள். எனினும் அவ ளுக்கு இயல்பாக ஏற்பட்டிருந்த தெய்வ பக்தியும், உயர் பண்பு களிடமுள்ள பற்றுதலும் அவளுக்கு மனநிறைவையும் அமைதியை யும் அளித்து வந்தன. உத்தமர்களின் வரலாறுகளையும், காந்திஜீ யின் சிந்தனைகளையும் அவள் தன் மகனுக்குச் சிறு பிராயம் முதலே கற்பித்து வந்தாள். அவனுடைய தந்தையின் விருப்பு வெறுப்பு கள் அவனிடம் படிந்துவிடலாகாது என அவள் கண்ணும் கருத்து மாகக் கவனித்தாள். . - சதானந்தத்தின் தந்தை மகாலிங்கம் நல்ல நிலையில் வாழ்ந்த வர் தான். ஏதோ ஒரு உத்தியோகமும் பார்த்து வந்தார். முரட்டுத்தனமும், அகங்காரமும், வாழ்க்கை இன்பங்களில் மித மிஞ்சிய நாட்டமும் கொண்டிருந்த அவர் கிடைத்த பணத்தை ‘. . ; எல்லாம் கரியாக்கி வந்தார். சூதாட்டம், மதுக்குடி, மங்கையர் பும் என்று அலைந்து திரிந்த அவர் சில சமயம், கண்டவர்