பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 அன்னையும் பிதாவும் வெகு பிரியமாக இருந்தார்கள். பங்கஜம் பத்து வயதாயிருந்த போதே, தாயார் தகப்பளுர் இருவரும் இறந்துவிட்டார்கள். இப்போது பங்கஜத்திற்கு வயது இருபது, இன்னும் விவாகமாக வில்லை. அர்த்தநாரி வீட்டுக்குக் கோவிந்தராவ் போகும்போதும், அவர் வீட்டுக்கு அர்த்தநாரி வரும்போதும், பங்கஜமும் கூடவே இருந்து பேசிப் பழகுவாள். பழகப் பழகப் பங்கஜத்திற்கும் அர்த்தநாரிக்கும் சிநேகபாவம் முற்றுவதைக் கோவிந்தராவ் கண்டு, மகிழ்ச்சி அடைந்தார். ஏன் இவர்கள் இருவரும் விவாகம் செய்துகொண்டு சுகமாய் இவ்விடமே இருக்கக் கூடாது? என்று பல தடவை யோசிப்பார். 2 ஒருநாள் கோவிந்தராவ் தங்கையைப் பார்த்து பங்கஜம், நீ கலியாணம் செய்துகொள்வது பற்றி யோசித்திருக்கிருயா? ' என்ருர். . . அதற்கென்ன ? செய்து கொண்டாலாச்சு ’’ என்ருள் பங்கஜம். - அப்படியாளுல், நம் அர்த்தநாரியைக் கலியாணம் செய்து கொள்ளலாமா? ’’ இந்தக் கேள்வி பங்கஜத்திற்கு எவ்வித அருவருப்பும் தர வில்லை. ஆளுல், பதில் சொல்லாமல் வேறு ஏதோ பேச்சு எடுத்து விஷயத்தை மெள்ள நழுவ விட்டாள். சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் ஏதோ சந்தர்ப்பம் நேரிட்டதையொட்டி, கோவிந்தராவ் இந்தக் கேள்வியை மறுபடி கேட்டதற்கு, ஏன் கோபு, என்மேல் உனக்கு வெறுப் புத் தோன்றிவிட்டதா? நான் உனக்குப் பாரமாய்ப் போனேன் போல் இருக்கிறது" என்று சிரித்துக்கொண்டு சொல்லிப் பிறகு அழ ஆரம்பித்தாள். பைத்தியமே ! பாரமாவது, வெறுப்பாவது யாரை யாவது கலியாணம் செய்துகொள்ளப் போகிருயா, இல்லையா ! உனக்கு அது இஷ்டமில்லாமற் போனல் சொல் : அதுவும் எனக்குச் சந்தோஷந்தான், நாம் என்றும் கூடவே பிரியாமல் இருக்கலாம்' என்று சொல்லி அவள் கண்களைத் துடைத்தார். மறுபடியும், 'அம்மா செத்துப்போளுள். நான் தானே இதை யெல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்?' என்ருர், ஏற்பட்டால் செய்து கொள்கிறேன், அதற்கென்ன இப்போது?" என்ருள் பங்கஜம், . . . . . .