பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் 385 அனைவரும் வெறுக்கத் தகுந்த விதத்தில், அருவருப்பாக நடந்து கொள்வது உண்டு, சதானந்தத்துக்கு அத்தகைய நிகழ்ச்சிகள் எத்தனையோ தெரியும். அவற்றிலே ஒன்று, இப்போது நினைத்தால் கூட குமட் டல் வருகிற அளவுக்கு அவன் உள்ளத்தில் அது உறைந்திருந்தது; ஒருநாள் முன்னிரவு. அவன் திண்ணையில் அரிக்கன் விளக்கு முன் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தான். அவன் வீட்டின் முன்னே குதிரை வண்டி ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து அவன் அப்பா தான் இறங்கினர். அவர் நன்ருகக் குடித்திருந் தார் என்பதை அவருடைய தோற்றமும், உளறலும், தள்ளாட்ட நடையும் விளம்பரப்படுத்தின. போடா...போடாங்கேன்...என்னடா ரூபா ? என்று கத்தி ஞர். தொடர்ந்து சங்கீதம் என்ற நினைப்பில் ஊளையிட்டார். மேகம் திரண்டு வர்ருது வெள்ளம் புர்ரண்டு வர்ருது தண்ணி உருண்டு வர்ருது தாகம் தணிஞ்சு வர்ரலே !’ தெருவில் வேடிக்கை பார்க்கும் கும்பல் கூடிவிட்டது, அவர் சில எட்டுகள் காலடி பெயர்த்து வைத்ததும், வாந்தி எடுத்தார். குடலைப் பிடுங்கும் நாற்றம் சகிக்க முடியவில்லை சதானந்தத் துக்கு. - அவர் தள்ளாடி அதிலேயே விழுந்தார். பிரக்ஞை தவறி விட்டது. அநேகர் சேர்ந்து, அவரைத் தூக்கி, வீட்டினுள் எடுத்துச் சென்ருர்கள். படுக்க வைத்தார்கள். வெளியே போனர்கள். இவருக்கு ஏன் இந்தக் கேடு? கண்ணு மூக்கு தெரியாமல் குடிச்சிருக்காரு ' என்று பல பல பேசி நடந்தார்கள்: அதெல்லாம் சதானந்தம் காதில் விழுந்து, மனசில் தைத்தன. அவனுக்கு வெறுப்பு அதிகரித்தது. அவன் தாய், தந்தையின் சட்டையை அகற்றி விட்டு, ஈரத் துணி கொண்டு அவர் உடம்பை சுத்தம் செய்தாள். மீண்டும் படுக்க வைத்தாள். அவர் கட்டையாகத்தான் கிடந்தார். அவனுக்கு அவன் அம்மா மீது மிகுந்த பரிவும் பாசமும் உண்டா யின. அவன் சீக்கிரமே துரங்கிப்போன்ை. எவ்வளவு நேரம் சென் றிருக்கும் என்று தெரியாது. திடுக்கிட்டு எழுந்தான். காட்டுக் கூப்பாடும் சண்டையும் போல் ஒலிகள் அவன் காதில் பட்டு, ат — 25 - -