பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/391

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 சத்திய சோதனை அவனை எழுப்பி விட்டன. கவனித்தான். அவன் தந்தையின் குரல்தான். எவ்வளவு வெறித்தனமாக ஒலித்தது அது ! "அப்படித்தான் குடிப்பேன். அது என் இஷ்டம். நீ யாருடீ என்னை அதிகாரம் பண்ண ? இதையே அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் அம்மாவை அடித்தது போல வும் தெரிந்தது. அவன் தாய்க்காக விம்மி விம்மி அழுதான்; குடிவெறியால் மிருகமாக மாறிவிடும் தந்தையை வெறுத்தான், குடி, மனிதனை எவ்வளவு கேவலமாக ஆக்கிவிடுகிறது : மது வின் உதவியால் மனிதன் எவ்வித இழிந்தவன் ஆகி விடுகிருன் ! இதை நன்கு உணர்வதற்கு அவனுக்கு நிறையவே வாய்ப்புகள் கிட்டின. அதனல்தான், மனிதன் மனிதனுக வாழவேண்டும் என விரும்பிய உத்தமர்கள் மதுக்குடியை வெறுத்து, அதை விலக்க வேண்டும் என்று சொன்னர்கள் ; அதனலேயே காந்திஜி யும் மது விலக்கைத் தீவிரமாக ஆதரித்தார் என்பதைச் சதானந் தம் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவன் தந்தை சிக்கிரமே செத்துப்போர்ை. அவர் சொத்து. பணம் எதுவும் விட்டுவைக்கவில்லை. அனைத்தையும் குடி, கூத்தி வகையராவில் தீர்த்துவிட்டுப் போயிருந்தார். பொருளாதார நோக்கிலும் மதுக்குடி மனிதரை நன்கு வாழ விடுவதில்லை. அது தனி நபர் வாழ்வையும், குடும்ப வாழ்வையும் சிதைத்துச் சீரழித்து விடுகிறது என்று கருதிய காந்திஜீயின் சிந்தனை உயர்வை சதானந்தம் அனுபவப்பூர்வமாக உணர்ந்து போற்றினர். குடியில் உல்லாசம் பெற விரும்பியவர்களுக்கு அவர் நல்லுரை கள் புகல்வது வழக்கம். . அவருடைய நண்பர்களில் ஒருவர் ஜாலியாகக் குடிப்பதை' பெருமையாக மதித்து வந்தார். ஒரு சமயம் அவர் சதானந்தந் தைக் காண வருகையில் குடித்து விட்டு வந்தார். ‘நண்பரே, குடிப்பது நல்லதல்ல. நீங்கள் ஏன் குடிக்கிறீகள்? என்று அமைதியோடு கேட்டார் சதானந்தம். அது என் இஷ்டம். அது எனக்கு சந்தோஷம் தருகிறது. நான் விரும்பும் இன்பங்களில் அதுவும் ஒன்று' என்று நண்பர் வாதாடினர். சாதாரணமாகத் தொடங்கிய பேச்சு சூடான விவாத மாகத் திரிந்தது. ஒரு கட்டத்தில் நண்பரின் ஆத்திரம் அடக்க முடியாதது ஆயிற்று: 'வாயை மூடு ' என்று சொல்லி, அவர் சதானந்தத்தின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.