பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/392

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக் கண்ணன் 387 சதானந்தம் மெலிந்தவரல்லர், கோழை இல்லை. எதிரே இருந்தவரை நையப் புடைக்கும் சக்தி அவரிடம் இருந்தது, ஆயினும் அந்த எண்ணம் அவருக்கு இல்லை. காந்திஜியின் வரலாறும் மணி மொழிகளும் அவரை அமைதி நிறைந்த மனித கை வளர்த்திருந்தன. அவர் புன்னகை புரிந்தார். 'நண்பரே, உமக்கு இன்பமும் சந்தோஷமும் உண்டாகும் என்ருல், இந்தக் கன்னத்திலும் ஓங்கி அறைந்துகொள்ளலாம்” என்று மறு கன்னத்தைக் காட்டினர் சதானந்தம். நண்பர் அதிர்ச்சியுற்றவர் போல் செயலிழந்தா ர். சதானந் தத்தின் அமைதி மலர்ந்த முகத்தையே சிறிது நேரம் பார்த் திருந்தார். பேசாது எழுந்து போனர். மறுநாள் அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. மன்னிப்புக் கோரி எழுதியிருந்தார். அறிவை இழக்கச் செய்யும் குடியை விட்டுவிட முயலுவேன் என்றும் அறிவித்திருந்தார். நண்பர். அப்பொழுதும் சதானந்தம் புன்னகை தான் புரிந்தார். பண்பட்டிருந்த அவர் உள்ளத்திலும் உளைச்சல் உண்டாக்கு வதாக இருந்தது அவருக்கு வந்திருந்த புதிய சோதனை. 3 சித்தியத்தைக் காப்பதற்காக அரசு துறந்து நாட்டை இழந்து, மனைவியையும் மகனையும் அடிமைகளாக்கி விட்டு, சுடலை காத்து நின்ற மன்னன் அரிச்சந்திரன் தீயெழக் கண்டு ஓடிவந்து பார்த்த போது, தன் மனைவியே தங்கள் மகனின் உயிரற்ற உடலை எரிக்க முயல்வதை அறிந்தான். ஆயினும், கட்டணம் இல்லாமல் எரிமூட்டக் கூடாது என்று தடுத்தான். சத்தியம், தன்னைக் காதலிப்பவர்களே, வெகுவாகச் சோதனை செய்யும் இயல்புடையது. - சத்தியத்தை விடாது கைக்கொள்ள விரும்புகிற சாதாரண மனிதனும், வாழ்க்கையில் பல சோதனைகளையும் போராட்டங் களையும் அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது. இதைச் சதானந்தம் உணராதவரில்லை. அவருக்கு உறுதியான பலமாக இருந்து நல்வழி காட்டி வந்த தாய் லட்சுமி அம்மாள் இறந்து போன புறகு, அவர் தமது மனே திடத்துடனும் கொள்கைப் பிடிப்புடனும்தான் முன்னேற வேண்டியிருந்தது. லட்சியப்பாதை-அது தனிநபர்