பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/393

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

sss சத்திய சோதனை தேர்ந்து கொண்டதாயினும், சமுதாயம் தனக்கென அமைத்துக் கொண்ட தாயினும், ஒரு நாட்டுக்கென்று தீர்மானிக்கப்பட்ட தாயினும்-கரடு முரடானதே, பண்படுத்தப்பட்ட வழவழப்பான சாலைவழி அல்ல என்பதை அவர் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்வது வழக்கம். என்ருலும், வியாபார ரீதியில் செயல் புரிகிற இன்றைய மனிதர்கள் மத்தியில், பணத்தையும் பணம் சேர்க்கும் சுலப வழிகளையும் போற்றி வழிபடும் இந்த நர்கரிக யுகத்தில், சத்தியத் தில் தீவிரமான பற்றுக் கொண்டு விட்ட சதானந்தம் எத்தனை யோ சங்கடங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியிருந்தது. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் சகமனிதர்களும் அவரை, அவருடைய லாபத்துக்காக இல்லாது தங்களுடைய நன்மைக் காகப், பொய் சொல்லும்படி தூண்டியபோதும் அவர் தன்னம் பிக்கையோடும் மனஉறுதியோடும் மறுத்துவிட நேரிட்டது. அவ்வேளைகளில் அவருக்கு ஏற்பட்ட இடைஞ்சல்கள் பல. ஒரு நிகழ்ச்சியை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். அவர் ஒரு பெரிய வீட்டின் சிறு பகுதியில் குடியிருந்தார். நாற்பது ரூபாய் வாடகை, ஒரு சமயம் வீட்டுச் சொந்தக் காரர் அவரிடம் சொன்னர்- வரி விதிக்கிறவர்கள் வந்து கேட் பார்கள். நீங்கள் எங்களுடைய உறவினர்கள் என்றும், வாடகை எதுவும் கிடையாது என்றும் சொல்லுங்கள் என்று' சதானந்தம் அதற்கு இசையவில்லே. நான் தான் வாடகை கொடுத்து வருகிறேனே! நான் ஏன் பொய் சொல்ல வேண்டும் என்ருர். உள்ளதைச் சொன்னல் அதிகமான வரி விதித்து விடுவார்கள் : எனக்கு ஒரு உதவியாக இதைச் செய்யுங்கள் என்று கோரினர் வீட்டுக்காரர். சதானந்தம் பிடிவாதமாக மறுக்கவும், போகிறது; குடக்கூலி பத்து ரூபாய் என்று சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் அவர். நான் யாருக்காகவும் பொய் சொல்ல முடியாது உள்ளதை உள்ள படியே சொல்லுவேன். பத்துருபாய் தான் வாடகை என்று நான் சொல்ல வேண்டுமானல், நீங்கள் பத்து ரூபாய் மட்டுமே வாங்கிக்கொள்ள வேண்டும் என்று வாதாடினர். வீட்டுக்கார ருக்கும் அவருக்கும் தகராறு முற்றியது. சதானந்தத்துக்குக் கல்யாணமாகி ஒரு வருஷம் தான் ஆகி. யிருந்தது. அவர் தம் மனைவியையும் தமது வழியில் பழக்கு வதற்கு அரும்பாடு பட்டு வந்தார். இச் சந்தர்ப்பத்திலும் அவள் தன் சுபாவப்படி, நீங்கள் வேண்டுமானல் அப்படிச் சொல்ல வேண்டாம். ஒன்றுமே பேசாமல் இருந்து விடுங்கள், நான் சொல்கிறேன். இதல்ை நமக்கு என்ன கஷ்டம்?"