பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 389 சதானந்தம் அவளுக்காக, அவளது அறியாமைக்காக. இரக்கப்பட்டார். தமது கொள்கையில் விடாப்பிடியாக இருந். தார். வீட்டுக்காரர் ஆத்திரம் கொண்டு, வீட்டை உடனடி யாகக் காலிசெய்து விடவேண்டும் என்று கட்டளையிட்டார். அவருடைய மிரட்டலோ, மனைவியின் வேண்டுதலோ, சதானந்தத்தின் உறுதியைத் தளர்வுறும்படி செய்ய இயலவில்லை. அவர் தீவிர முயற்சி செய்து, ஒரு நண்பரின் துணையோடு, சிறிது தூரத்தில் உள்ள தோட்டம் ஒன்றில் குடிசை கட்டிக்கொண்டு, வீட்டைக் காலி செய்துவிட்டார். அவர் மனைவி பாக்கியம் அதற்காக அடிக்கடி அவரைக் குறை கூறி வந்தாள். இதர பல விஷயங்களிலும் அவள் முணுமுணுத்து முரண்டுவதும் உண்டு. ஆயினும், சதானந்தம் அன்போடும் பிரியத்தோடும் பொறுமையோடும் அவளுடன் பழகி அவளைத் தனக்கு ஏற்ற துணைவியாக மாற்றிக்கொண்டார். அவ்வப்போது சிறு சிறு பிணக்குகளும் குறைபாடுகளும் தல்ை காட்டாது போவதில்லை. குழந்தைக்ள் பிறந்து, குடும்பம் பெரி தான பின்னர் இவ்வித நெருக்கடிகளுக்குக் குறைவே கிடையாது: ஆலுைம், சதானந்தம் மனம் சோர்வதே கிடையாது. உயர் கொள்கைகளிலிருந்து நழுவியதும் இல்லை. . அவர் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட பலப்பலச் சோதனை களிலும், இப்போது தலையெடுத்து அவருக்குப் பெரும் மன உளைச்சல் தந்துகொண்டிருந்தது தான் மகாப்பெரியது, கடுமை யானது என்று சதானந்தத்துக்குத் தோன்றியது. 4 'கடவுள் சத்திய மயம் (GoD is TRUTH) என்று எழுதி வந்த காந்திp, சத்தியத்தின் மாண்பையும் சக்தியையும் உணர்ந்து கொண்ட பிறகு, சத்தியமே கடவுள்' (TRUTH IS GOD) என்று எழுத முற்பட்டார். வெகு நேர மனக்குழப்பத்துக்குப் பிறகு சதானந்தம் ஒரு முடிவுக்குவந்தார். . . . . . .” அப்படி ஒரு முடிவுக்கு வரவேண்டியிருப்பதற்காக அவர் வேதனைப்படத்தான் செய்தார். இருந்தாலும் வேறு வழியில்லை: அவருடைய மனசாட்சி அந்த முடிவைத்தான் அவருக்கு வகுத்துக் காட்டியது. அவருடைய சத்திய வேட்கை அப்படிச் செய்யவேண்டியது அவர் கடமை என உணர்த்தியது: