பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/395

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 சத்திய சோதனை அவரை சேர்ந்தவர்களுக்கு அவருடைய தீர்மானமான முடிவு அளவிலா வருத்தமும் துக்கமும் உண்டாக்கும். அவருடைய மனைவி அழுது புலம்பி என்றென்றும் அவரைக் குறை கூறிக் கொண்டே யிருப்பாள். அவர் மகள் தன்னுடைய வாழ்வே இருண்டுவிட்டது என்று சாம்பிக் குவிந்துகிடப்பாள். தனது வாழ்வைப் பாழ்பண்ணியது தன் தந்தையேதான் என்று. புழுங் கிக் குமைந்து, அவரை வெறுக்கத் தொடங்கிவிடுவாள். இதை எல்லாம் அவர் சிந்திக்காமலில்லை. பூத்துக்குலுங்கி மகிழ்வும் மங்களமும் நிறைந்த குடும்பமாகத் திகழவேண்டிய வீட்டில் களங்கமும் இருளும் துயரமும் ஏக்கமும் படிந்துவிடுமே-அந்த நிலைக்கு ஆளாகக் கூடியவள் தன் அருமை மகள் மரகதமாக இருக்கிருளே-என்ற எண்ணம்தான் சதானந் தத்தின் மனசை உளைய வைத்தது. மரகதம் நன்முக வாழவேண்டும் என்றுதான் அவர் ஆசைப் பட்டார். அவளை முத்துசாமிக்குத் திருமணம் செய்து, தனிக் குடித்தனத்துக்கு வேண்டிய வசதிகள் பலவும் அமைத்துக் கொடுத்தபோது, அவளுடைய எதிர்காலம் ஒளியும் வளமும் நிறைந்ததாகவே இருக்கும் என்று எண்ணினர். முத்துசாமி நல்ல இளைஞன், உழைக்கும் ஆர்வமும் ஆற்றலும் உடையவன் என்றே பலரும் அபிப்பிராயப்பட்டார்கள். அவருக்கும் அவ் வாறே தோன்றியது. பல மாதங்கள் வரை மரகதத்தின் வாழ்க்கை குளுமையும் இனிமையும் பெற்றே விளங்கியது. மெதுமெதுவாகத் தான் முத்துசாமியின் உண்மை உருவம் சதானந்தத்துக்குப் புலப் படலாயிற்று: . பஸ் கண்டக்டர் பணி புரிந்து வந்த முத்துசாமி ஒழுங்காக வேலை செய்வதே கிடையாது: அலுவலுக்குப் போகாமல் வேறு எங்கோ போய் சில நண்பர்களுடன் பணம் வைத்துச் சீட்டாடிப் பொழுது போக்கும் வழக்கம் உடையவன் அவன் உழைத்துப் பாடுபடுவதை விட, உடல் உழைப்பு இல்லாமல் உல்லாச முறைகளிலேயே எளிதில் விரைவில் பணம் பண்ணிவிட வேண்டும் எனும் ஆசைபற்றி அலையும் எத்தனையோ பேர்களில் அவனும் ஒருவன். அதனல் அவன் குதிரைப் பந்தயம், சூதாட்டம் முதலியவைகளில் மிகுந்த உற்சாகம் காட்டி வந்தான். இவற் றினும் மேலாக இன்னொரு விஷயம் சதானந்தம் உள்ளத்தில் தைத்து இரத்தம் கசிய வைத்தது. அவன் திருட்டுச் சாராயம் காய்ச்சி, கள்ளத்தனமாக விற்பனை செய்யும் குழுவிலும் முக்கியமான பங்கு ஏற்றி