பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 391 இவ் உண்மைகளில் சில மரகதம் மூலம் தெரிய வந்தன." பிறகு அவர் விசாரித்து அறிய முயன்றபோது எல்லா விவரங்களும் அம்பலமாயின. சதானந்தம் முத்துசாமியிடம் நல்லுரைகள் புகன்ருர்: மரகதத்துக்கு போதித்து அவனை நல்வழிப்படுத்த முயன்ருர், அவன் திருந்துகிறவய்ை தோன்றவில்லை. மேலும் மேலும் நாசப் பாதையிலேயே முன்னேறிக் கொண்டிருந்தான். அவர் இறுதி முறையாக அவனுக்கு நல்ல வார்த்தைகள் சொன்னர். அவன் அவரை அலட்சியமாக மதித்தான். என் போக்கில் தலையிடுவதற்கு நீர் யார்? நான் எப்படியும் வாழ்க்கை நடத்துவேன். என் இஷ்டம்போல் என்ன வேண்டுமானுலும் செய்வேன். உம் மகள் கஷ்டப்படவில்லை. அவள் என்ளுேடு இருப்பது உமக்குப் பிடிக்கவில்லை என்ருல், அவளை அழைத்துக் கொண்டு போய் உமது வீட்டோடு வைத்துக்கொள்ளும்!’ என்று திமிராகப் பேசினன். இப்போது தயாரிப்பதை விட அதிக அளவில் சாராயம் காய்ச்சி விற்கப் போவதாகப் பெருமை வேறு பேசினன்: அவன் போக்கு சதானந்தத்துக்குக் கசப்பு அளித்தது. மனித உருவில் நடமாடும் கயவன், மக்கட் பதடி அவன்; அவனைச் சீர் திருத்துவது சாத்தியமில்லை என்று அவருக்கு நிச்சயமாகப்பட்டு விட்டது. சத்திய மார்க்கத்தில் செல்லும் தம்முடைய கடமை என்ன என்று அவர் சிந்தித்தார். அதனல் எழக்கூடிய விளைவுகள் அவருக்கு மனவேதனை தந்தன. எனினும் அவர் தம் கடமையைச் செய்யத் துணிந்தார். சமூகத் துரோகியாய், தீமையான செயல் களைப் புரிந்துகொண்டு கெக்கலி கொட்டித் திரியும் வீணனை சட் டத்தின் கைகளில் அகப்பட வைத்து உரிய தண்டனை பெறும்படி செய்யவேண்டியது தான் என்று அவர் தீர்மானித்தார். அப்படி அகப்படக் கூடியவன் தன் மகளின் கணவன் தான் என்பதனல் அவர் கலக்கம் அடையவில்லை. உரிய முறைகளின்படி ஆவன செய்து விட்டு அமைதியாக இருந்தார் அவர். மறுநாள் போலீசார் வந்து, பல இடங்களையும் சோதனை செய்து, திருட்டுச் சாராயம் தயாரிக்கும் சாதனங்களைக் கைப் பற்றிக்கொண்டு, முத்துசாமியையும் மற்றும் சிலரையும் கைது செய்து சென்ற செய்தி அவருக்குக் கிடைத்தபோது சத்ானந்தம் புன்னகை புரிந்துகொண்டார். ‘அப்பா, என் குடி கெட்டுதே! என் வீட்டில் விளக்கு அணஞ்சு போச்சே!” என்று அழுது அடித்துக்கொண்டு மரகதம் வந்து சேர்ந்தபோதும் அவர் அமைதியாகத்தான் இருந்தார்.