பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/398

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு. ப. சேது அம்மாள் 38 சோதனை பங்குனிமாதத்துப் பூர்ணிமையிரவு. சந்திரனுடைய படுக்கையறையில், ஜன்னல் வழியாகப் பாய்ந்து வந்த நிலவு அவனுடைய படுக்கையில் வியாபித்திருந்தது: - படுக்கையில் படுத்திருந்த சந்திரனின் பார்வை, நீலவானில் ஊர்ந்து செல்லும் முழுமதியில் லயித்திருக்க, மனதிலே நினைவு களின் மோதுதல்கள் ! சாந்தி நிகேதனத்தில் மாணவனுகக் கல்வி கற்றபோதும், காந்தி கிராமத்தில் சேவக் காகப் பொதுநலத் தொண்டளுகப் பணியாற்றியபோதும் தனது எளிய வாழ்க்கையில் நிலவியிருந்த நிம்மதியும், நிறைவும் உற்சாகமும்...இப்போதுள்ள செல்வச் செழிப்பில், போக பாக்கியங்களில் காணமுடியாததோடு... படக், அறையில் வெளிச்சம் பரவியது ! தலைநிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு நெற்றியில் சாந்துப்பொட்டும், கொள்ளைச்சிரிப்புமாக உள்ளே வந்த சியாமளா கையிலிருந்த பால் செம்பை மேஜைமீது வைத்து விட்டு, நிலாவைப் பார்த்தீர்களா, பட்டப்பகல் மாதிரி ! " என்ருள் உவகையுடன், பார்வையைத் திருப்பாமலே, விளக்கை அணைத்துவிடு சியாமளா, நிலா வெளிச்சமே போதும், என்ருன் சந்திரன் 'பாலைச்சாப்பிட்டு, வெற்றிலை போட்டுக்கொள்ளுங்கள். பிறகு அணைக்கிறேன்." என்று சொல்லி, பாலை டம்ளரில் விட்டுக் கொடுத்துவிட்டு, வெற்றிலக்குச் சுண்ணும்பு தடவி, நரம்பைக்