பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/399

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 சோதனை கிழித்து வைத்துக்கொண்டு பாக்கு பொடியைக் கொடுத்து, வெற்றிலையை மடித்துக் கொடுத்துக் கொண்டே, இந்தமாதிரி நிலாவிலே திருஷ்டியைச் செலுத்தி, நிலாவிலேயே படுத்துத் துரங்கினல் நிச்சயமாகப் பைத்தியம் பிடித்துவிடுமாம் ! எங்கள் தாத்தா சொல்லுவார்... ' என்ருள் சியாமளா, சந்திரன் சாவகாசமாகத் திரும்பிப் பார்த்து, ' நிலவின் ஒளியிலே வாழ்க்கை முழுவதையும் செலவுசெய்து நிலவின் செளந்தரிய விலாசங்களை வர்ணித்த வால்மீகி, காளிதாஸன், ரவீந்திரர் போன்ற ஞானிகளுக்குப் பிடித்த பைத்தியம் எனக்கும் பிடிக்காதா என்ற ஆசைதான் 1” போங்கள், கோணல்கட்சி பேசுவதே உங்கள் வழக்கமா கப் போய்விட்டது. நான் பொய் சொல்லுகிறேன் என்ரு நினைக் கிறீர்கள் ? . " நீ விளக்கை அணை முதலில். பிறகு பேசலாம்-இன்றிரவு ஒரு நல்லகதை சொல்லப்போகிறேன் உனக்கு, ' என்ருன் சந்திரன். - விளக்கை அனைத்துவிட்டு வந்து அமர்ந்தாள். சந்திரன் தன்னை மறந்தான். நிலாவையும், வானத்து மீனையும் காற்றையும் நேர்பட வைத்தாங்கே குலாவு மமுதக்குழம்பைக் குடித்தொரு கோலவெறி படைத்தோம்: உலாவுமனச் சிறுபுள்ளினை எங்கனும் ஒட்டி மகிழ்ந்திடுவோம் பலாவின் கனிச்சுளை வண்டியிலோர் வண்டு பாடுவதும் வியப்போ!' நல்ல ராகஞானம் உண்டு சந்திரனுக்கு பாடிமுடித்து விட்டுத் திரும்பிப் பார்த்தான். 'சியாமளாம்பிகைக்கு ரொம்பக் கோபம் போலிருக்கிறதே ' என்ருன் விளையாட்டாக. "ஆமாம்! என்னைவிட உங்களுக்கு அந்த நிலாத்தேவன்தான் உயர்த்தி, ’’ -

  • ந்தான் எனக்கு உயர்த்தி சியாமளா ! நிலவுத்தேவ னல்ல. ' என்ருன் மனமும், குரலும் நெகிழ.

ஆமாம், ரொம்ப நிஜம் 1’’ " நிரூபித்துக் காட்டினல் சரிதானே?" 'பேசவாவது கற்றுக்கொண்டிருக்கிறீர்களே-என்னை ஏமாற்ற என்று!