பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை கிதையின் ஆற்றலுக்கு அளவில்லை. மனம், மொழி, மெய் இம் மூன்றுமே, பிடாரனின் குழல் கேட்ட பாம்பைப் போல, கதை ஆட்டுவித்த படியெல் லாம் ஆடுகின்றன. மனிதனே ஆக்கிப் படைப்பதற்குக் கதையினைக் கையாண்டுள்ளதை உலக வரலாற்றில் காணலாம். ஊக்கம் குறைந்து, உணர்விழந்து மண் ளுேடு மண்ணுய் வாழ்ந்த பாரத மக்களைத் தமது சங்க நாதத்தால் காந்தியடிகள் தட்டி எழுப்பினர். அவரது வாழ்க்கை வழியினைக் கருவூலமாகக் கொண்டு பல கற்பன சீலர்கள் அன்று கதைவுருக் கொடுத்து உலாவ விட்டனர்; இவற்ருல் ஊட்டமும், உரமும் பெற்ற மக்கள் அருளாலும், அன்பாலும் உந்தப் பெற்று இணை யற்ற வீரம் காட்டிப் புது வழியில் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்தனர். சுதந்திர இந்தியாவில் நம் நாட்டின் தந்தையான காந்தியடிகளின் நூற்ருண்டு விழாக் கொண்டாடுகின் ருேம். இந்தக் காலத்தில் காந்தி வழி காட்டும் சிறு கதைகள் சிலவற்றைத் தொகுத்து அண்ணலுக்குத் தமிழ் நாடு காந்தி நினைவு நிதியின் காணிக்கையாகச் சமர்ப்பிக்க நினைத்தோம். இந்த முயற்சியில் அன்பர் * மகரம் உதவினர். கதாசிரியர்களின் ஒத்துழைப் பும் கிடைத்தது. எங்கள் தலைவர் திருமிகு பக்தவத்ஸலம் அவர்கள் வாழ்த்துரை இந்நூலுக்கு அணி செய்கிறது. ஐவரி அச்சகத்தார் மிகவும் அழகாக இதற்கு உருக் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் நன்றி. தமிழ் அன்பர்களின் ஆதரவு எங்கள் முயற் சிக்கு ஏராளமாகக் கிடைத்து வருகிறது. அவர்கட் குக் கடப்பாடுடையோம். - க. அருணசலம் மிது ைர, - செயலாளர், 6-3-'69. காந்தி கினைவு நிதி,