பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி 23 'நீங்கள் இருவரும் பிரியமாயிருக்கிறீர்களே ! நாம் தான், சாதி குலம் கவனிப்பதை விட்டுவிட்டோமே. ஏன் அர்த்த நாரியை நீ விவாகம் செய்துகொள்ளக் கூடாது? என்ருர், சாதியைப்பற்றி, என்ன இருக்கிறது? ஆளுல், அவர் மண்ம் எப்படியோ ? என்ருள் பங்கஜம். அவர் மனம் என்ன? உன்னைப்போல் ஒருத்தி மனைவி யாகக் கிடைக்க அவர் தவம் செய்யவேண்டும் ' என்ருர் கோவிந்தராவ். தன் தங்கைக்குச் சமானம் உலகத்தில் யாரு மில்லையென்பது கோவிந்தராவின் அபிப்பிராயம். பிறகு, அர்த்தநாரியிடம் விஷயம் சொன்னபோது, அவன் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. ஆனல், ஒரு நிமிஷம் கழித் துத் திடீர் என்று முகம் கறுத்தது. இது எப்படி முடியும், கோவிந்தராவ்? என்ருன். ஏன், என்ன தடை?” என்று கேட்டார் கோவிந்தராவ். '" நான் எந்தச் சாதி. நீங்கள் எந்தச் சாதி ! ' என்ருன் அர்த்தநாரி. ' சாதியைப்பற்றி என்ன பேச்சு என்று கோவிந்தராவ் சிரித்தார். முதலியார் என்ன, பிராமணன் என்ன ? நாம் இதையெல்லாம் தள்ளிவிட்டு ரொம்ப நாளாயிற்று. நீங்கள் இருவரும் சம்மதித்துப் பிரியப்பட்டு முடித்தால் சாதியைப் பற்றி என்ன கவலை ? ' தான் கோயமுத்துார் ஜில்லா சைவ முதலியார் என்று அர்த்தநாரி அதற்குமுன் சொல்லி வந்திருந்தான். ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் கெளரவத்திற்காக இந்தப் பொய் முதலில் சொல்லி, அதைப் பிறகு மாற்ற முடியாமல் உண்மையை மறைத்தே வந்தான். இப்போது தன் குலத்தை உள்ளபடி சொல்ல வெட்கப்பட்டான். டில்லியிலிருக்கும் போது அங்கே சிலருக்கு அவன் சரித்திரம் தெரியும், பெங்களூரில் யாருக்கும் அவன் பூர்வோத்தரம் தெரியாது. பங்கஜத்தின் மனம் எப்படி?” என்ருன் அர்த்தநாரி. பங்கஜம் உம்மிடம் பிரியமாகத்தான் இருக்கிருள். நான் கேட்டதற்குப் பதில் சொன்னதில் சம்மதித்தவள் போல்தான் தோன்றுகிறது ' என்ருர். - நான் கேட்டுத்தெரிந்து கொள்வதுதானே முறை? என்ருன் அர்த்தநாரி. - . ' ஆம் ' என்ருர் கோவிந்தராவ்,