பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/401

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 சோதனை நேர்ந்தது. கன்னிகாதானபுலன் வேண்டுமென்று-ஒரு பணக் கார ஸளுதன. தர்மசிலர் தன் பெண்ணுக்கு பாலியத்திலேயே விவாகம் செய்தாராம்-அதுவும் எதற்காக ? கன்னிகாதானம் சாஸ்திர விதிப்படி செய்தால் புத்திரபாக்கியம் உண்டாகு மென்று ஜோசியன் சொன்னதைவைத்து, அந்த ஆசையில் பண்ணிவிட்டார் ! புத்திரன் பிறக்காத தோடு-பதின்மூன்றுவயதிலேயே பெண் விதந்துவாகி நின்ருள் மனசாட்சிக்குப்பதில் சொல்ல வழி தெரியாமல் அநியாயமாக அவர் பிராணனை விட்டார் ! வீட்டிலே பொழுது போகவில்லை-உள்ளுர் காந்தி கிராமத் தில் சேர்ந்து பொதுப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண் டாள் அவர் பெண், சியாமளா-! நான் நோயுடன் போராடும் போது அந்தப் பெண்-எனக்குச் செய்த தொண்டும், பரிவும் என்னே-கட்டைப் பிரம்மசாரியாக வாழ நினைத்து உறுதி பூண்ட என் திட சித்தத்தைக் குலைத்து விட்டாள் ! தன்னுடைய நிர்க்கதி-சூனிய மான வாழ்க்கை சோகத் திலே நலிந்து கிடக்கும் தாய்க்குப்பின் நமக்குத் துணே யார் என்ற திகில், எல்லாவற்றுக்குமாக-அந்தப் பெண் மனத்துள் அழுது அலறுவதை உணர்ந்தேன் ! சியாமளா, உணர்ந்த பிறகு என்னுல் ஒதுங்கிக் கொள்ள இயலவில்லை. ஒரு அபலைப் பெண்ணுக்கு வாழ்வளிக்க உறுதி பூண்டேன், " சியாமளா ! அன்றும் இதே நிலா இரவுதான்! நான் நோய் தெளிந்து ஒய்வுக்காகத் தங்கியிருந்தேன் அந்த ஆசிரமத்தில்.’ ஆசிரமத் தாழ்வாரத்தில் அமர்ந்து கண்ணிர் பொழிய மன மிழந்து தடுமாறினுள் அந்தப்பேதை 1' 'ஏன்? தன் வரலாற்றைக் கேட்டு அறிந்து-ஒரு அபலைக்கு வாழ்வு கொடுக்க முன் வந்து தன்னை ஏற்றுக் கொள்வதாக உறுதி கூறும் ஆண்மகனே நம்பவும் விரும்பினள்-ஆளுள் பயந் தாள் ! ஐயோ விதியே என்று அழுதாள் 1’’ - "என்ன மறந்து நான் எழுந்து ஒடினேன்! அவளை, ஏற்றுக் கொண்டேன்! பிறகு-ஒரு மாதம் சென்ற பிறகு தான்வயதான பெற்றேர்களைப்பற்றி நினைவு வந்தது!...”