பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/404

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. என். சுகி சுப்பிரமணியம் 39 சிலையும் சிந்தனையும் நிகராட்சி மன்ற உறுப்பினர் திருவாளர் இராமாமிர்தம் காய்கறி வாங்குவதற்குப் பையும் கையுமாக வந்தார்: தெருவிலுள்ள அசுத்தங்களைப் பார்த்ததும் பதவிக்கு வந்த மனம் ஒருமாத காலம் நைந்து வருந்திற்று. அவரது அதிகாரத் தொல்லைக்குப் பயந்து ஒருசில சமயம் நகரசுத்திகள் ஒடோடி வந்து சுத்தம் செய்தனர். நாளானதும் அவர் சொல்லும் போது முகம் சுளிக்க ஆரம்பித்தர்ை. என்ன சாமி, உங்கள் தெருவையே பார்த்துக் கொண்டிருந் தால் மற்றத் தெருக்கள் கதி என்னகும்? நியாயமான பேச்சு என்று அவர் பதவி மனம் பேசிற்று. பழைய குருடியாக மாறி நின்றது அவரது தெரு. அத் தெருவைத் தாண்டிப் போவதற்குச் சாமர்த்தியம் வேண்டும். கொஞ்சம் சர்க்கஸ் வித்தையும் தெரிய வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு என்ற சர்க்கார் முரசம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்தத் தெருவுக்குள் முழங்க வேண்டும். படை படையாகக் குழந்தைகளைப் பல்லாண்டு பல்லாண்டுகளாக வளர்த்து வரும் தெரு. குழந்தைகளின் விளையாட்டுப் பூமியும், தனித்து ஒதுங்கும் பூமியும், கடற்கரை, ஆற்றங்கரை என்ற மாலைப் பொழுதுபோக்கு , நந்தவனமும் ஒன்றே நகராட்சி மன்ற உறுப்பினர் பயின்ற தாண்டல், குதித்தல், எம்புதல் என்ற வித்தைகள் செய்து தமது தெருவைக் கடந்து அடுத்த எல்லைக் குள் வந்தார். - t : .. :' .. .: ; : .. .५ १०:': f: -