பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/405

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 சிலையும் சிந்தனையும் அவருடைய தாத்தாவின் பக்தி முதிர்ந்து, விளைவித்த பிள்ளையார் கோவில் நின்றது. கண்டதும் இராமாமிர்தத்துக்கு எல்லையில்லாத வெறுப்பு. காரணம் கோவில் தர்மகர்த்தா பதவி அவரை விட்டு விடை பெற்று விட்டது. மண்டிக்கடை மான்முண்டியாப்பிள்ளை பணத்தாலும், ஆள்கட்டுப் பலத்தாலும் அந்தப் பதவியைப் பிடுங்கிக் கொண்டார்; பழக்கம் பெரிய விலங்கு. பிள்ளையார் கோவில் கண்ணில் பட்டதும், அவர் செருப்பு காலைவிட்டுக் கழன்றது: கை மேல் துண்டைத் தோளுக்கு இறக்கிற்று; உடல் வளைந்து, தோப்புக்கரணத்துக்குத் தயாராகிறது. இன்றும் அப்படித்தான் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. யாரும் தம்மைக் கவனிக்கவில்லை என்பதை அறிந்து பிள்ளையார் முன் மூன்று தோப்புக் கரணத்தோடு தாடையில் போட்டுக் கொண் டார். பிறர் கண்காணிக்காத போது அவர் செய்கிற காரியம், மேலும் அப்பனே கணேச மூர்த்தி உன் தயவுதான் வேண்டும். நானே என் பிள்ளையோ உன் கோவி லுக்கு மீண்டும் தர்ம கர்த்தாவாக இருக்க அருள் புரியப்பா, படுபாவி மான்முண்டி ஒழியட்டும் ' என்று எண்ணினர். கோவில் மணியடித்தது. கணிர் கணிர் என்று கேட்டதும் அப்பன் உத்தரவு தந்து விட்டான்' என்று சிரித்தார். ஒரு கணம் அவர் மனம் வான ளாவப் பறந்தது. மறுகணம், சை அந்தத் துரோகி மான்முண்டி வாங்கி வைத்த வெண்கல மணியின் ஒசை ஆயிற்றே. நமக்கு நல்ல சகுனம் அதுவா உத்தரவு சொல்லும்? : என்றபடியே கோபத் துடன் காந்தி மார்க்கெட்டுக்குள் வேகமாக நடை போட்டார். நகரசபைச் சேவகன், கண்டிராக்டர் கண்ணுசாமி, இருவரும் கூழைக்கும்பிடு போட்டனர். சிறிது குசலப்பிரச்சனம்; விலை வாசித் தொல்லைகள் பற்றி மேல் போக்கு விசாரணை நடை பெற் நிறது. - ஐயாதான் நகரசபை ம்ன்றத்திலே அடித்துப் பேசி காந்தி சிலையைக் கொண்டு வந்தாங்க. பெருமை இவீங்களுக்குத்தான். ' நகராட்சிச் சேவகன் இது வரை லட்சம் தடவை இராமா மிர்தம் பிள்ளையைக் காணும்போதெல்லாம், சொல்லிவிட்ட பழைய பல்லவி, காந்தி சிலைக்குக் காரணம் இராமாமிர்தம் ஆலுைம் அதை லட்சார்ச்சனையாகக் கேட்பதிலும் நகரமன்ற உறுப்பினர்க்குப் பரம திருப்தி. - ஐயா பாடுபட்டதிேைல தான் காந்திக்கு மார்க்கெட்டுக் குள் சிறந்த இடம் கிடச்சுது என்று அனுபல்லவி பாடினர் கண்டிராக்டர்; 惨