பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/406

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி. என். சுகி சுப்பிரமணியம் 401 இராமாமிர்தம் உடல் உள்ளம் இரண்டும் சில்லிட்டது. புகழ்ச்சிக்கு இருக்கும் விறுவிறுப்பு புதுப் பெண்ணின் கரத்தைப் பிடிக்கும் ஆணுக்கு இருக்குமோ இருக்காதோ? இராமாமிர்தம் முகம் குப்பென்று சிவந்து சிலிர்ததது. முத்து முத்தான வியர் வைத் துளிகள்; காந்திக்கு உரிய இடமல்லவா ? பெருமை இருக் காதா? மயிர்க்கால்கள் குத்திட்டன, பகீரதப் பிரயத்தன செய்கையைத் தாம் செய்து விட்டது போல் உணர்ந்தார். இராமாமிர்தம் இத்தனைக்கும் வெள்ளைக்கார சார்ஜெண்டு பூட்சு காலில் உதை பட்டவர்; மறியல் செய்த தேச பக்தர். அன்று வெள்ளேயன் காலால் அடிபட்ட போது எத்தனை ஆனந்தமாக அகிம்சாவாதியாகப் பட்டுக் கொண்டு உடலையும் உள்ளத்தையும் ஒடுக்கினரோ அதுபோல அவர் இப்போது ஒடுங்கவில்லை. உள்ளம், உடல், இரண்டும் விசுவரூபம் எடுக்கிறது. காந்தியின் அருமை எந்தப் பயலுக்கு நம்மூரில் தெரியும்? கொள்ளை அடிக்கத்தான் தெரியும். கறுப்பு மார்க்கெட்டு, வெள்ளை மார்க்கெட்டு இரண்டையும் எவன் விட்டான் ? . அவர் குத்திக் காட்டியது மான்முண்டியாப்பிள்ளையை. ஆமாம் ஐயா, கொள்ளையடிக்கிறது கோடி கோடியாக, சந்நிதிக்கு சரவிளக்குப் போடுகிறேன் ; கோவிலுக்குக் கும்பா பிஷேகம் செய்கிறேன், தானதர்மம் செய்கிறேன் என்பார்கள். ' இராமாமிர்தத்தின் உடல் பனிமலைக்குள் புதைந்ததுபோன்ற உணர்ச்சி. ஆனலும் வாய்விட்டு மான்முண்டிப்பயல் செய்து விட்ட அக்கிரமம் எதையும் காண்டிராக்டர் சொல்லவில்லையே. அப்போது கார் வேகமாகத் தூசியை அள்ளி நிற்பவர்கள் முகத்தில் திணித்து விட்டுப் பாய்ந்தது. அது மான்முண்டியா பிள்ளையின் கார், - அது யார் கார் ? காரோடும் திசைக்குத் திரும்பி கோடாலிக் கும்பிடாக வணக்கம் போட்ட காண்டிராக்டர் ' பாம்புக்கு வாலும், மீனுக் குத் தலையும் காட்டிக் கொண்டிருந்த விலாங்கு. அட போகிற ஜோரைப் பாருங்கள். தர்மகர்த்தா போகிருர் என்று கேலியாகச் சொன்னர் காண்டிராக்டர். இவனைப் போல் தர்மகர்த்தா இருந்தால் கோவிலில் கடவுள் இருப்பாரா? ஊர் உருப்படுமா? எனக்கே தோன்று. கிறது. கோவில் குளங்களைத் துார்த்துவிட்டால் இவனப் போன்ற அயோக்கியன் பதவிக்கு வரமுடியாது. கோவில் கர-26