பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/407

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 சிலையும் சிந்தனையும் மரியாதை கொடுக்க வேண்டாம். சின்ன மனிதர்களின் பெரிய தனத்திற்காக கடவுள் கைகொடுக்க வேண்டுமா ?” ஆமாம் பாட்டுப் பாடினர் உடன் இருந்த இருவரும். தெய்வீகமான கோவிலை நிர்வாகம் செய்யவேண்டியவன் யார்? துறவிபோல் வாழும், கிடைப்பதை நியாய வழியில் சம்பாதிக்கும் யோக்கியன் அங்கே இருக்க வேண்டும்.” இராமாமிர்தம் சொல்லுக்குக் கண்ணுச்சாமி பேசுகிரு.ர். நீங்கள் சொல்லுகிற ஆளால் கோவிலுக்குப் புகழ் வராதே, மான்முண்டியார் வெள்ளி அங்கி சாத்தப் போகிறதாகக் கேள்வி. ரூபாய் பதியிைரம் மதிப்புப் பெறுமாம் ', தள்ளு குப்பையில், காந்தி சிலைக்கு வெள்ளிக்கிழமை யாவது மாலை போடுகிருர்களா ? போடுகிருங்க : பூ, பூக்கடை வாடிக்கை. அல்லாபிச்சை ராவுத்தர் நாலு ஊதுவத்தி கொடுக்கிரு.ர். சாமுவேல் கடை யில் சந்தனம் வாங்கிக் கொள்கிருங்க." அதுதான் சரி.' இராமாமிர்தம் நகர்ந்தார். அவருக்கு வணக்கம் செலுத் தினர் பேசிய நபர்கள். பிரதான வாயிலைக் கடந்து உள்ளே வந்தார். அவருடைய தெருக்களில் இல்லாத புதுவிதமான அசங்கியங்கள் அவர் காலில் மிதிபட்டன. அத்தனையும் மார்க் கெட்டில் விலை போகாத எச்சங்கள் : மிச்சங்கள். எங்கும் ஈ மொய்க்கும் ஈரச் சதசதப்பு. அவர் மனம், அடுத்த ஆண்டுக்குள் நீ இங்கே செமிட்டி பாவியாக வேண்டும் என்று கட்டளையிட்டது. நகரமன்ற உறுப்பினர் மனம், சாதாரண மனிதனேக் கட்டளை இடுகிறது. பலசரக்குக் கடை, தேங்காய்க் கடை பகுதிகள் சுத்தமான பகுதிகள் : மார்க்கெட்டுக்குள் நரகம் என்ற உரிமை கொண் டாடும் காய்கறி விற்பனைப் பகுதிக்குள், வித்துவின்றி விதை தெளிக்கலாம். சேறும் சகதியும் முட்டளவு ஆழம் காண்பிக்கும். இராமாமிர்தம் மனம் வழக்கம்போல் திட்டமிட்டது. அந்தப் பகுதியும் செமிட்டிக்குள் வந்தாக வேண்டும். செமிட்டி போடு வது பணமா? மனந்தானே. விஸ்தாரமாகப் போட்டது. மேலே நகர்ந்தார். யாரோ ஒரு சில கடைக்காரர்கள் யந்திர கதியில் வணக்கம் செலுத்தினர்கள் ; பதில் வணக்கம் போட்டுக்கொண்டு போனர். வாழைக்காய் விற்கும் பகுதிக்குள் வந்தபோது இரண்டு சோதாப் பயல்கள் பேசும் குரல் கேட்டது.