பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/408

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டி.என். சுகி சுப்பிரமணியம் 403 கடையிலே ஆள் இல்லையே, உள்ளே காரியமாக இருக்கிருரா கடைக்காரர்? டேய் அந்தப்பக்கம் ஒடிப்போய் நில்லு : அணுவுக்கு எத்தனை வாழைக்காய் விற்பது ?’’ மூன்றுகாய் விற்கலாம் : 韃 இராமாமிர்தம் மனதில் வாழைக்காய் மலிவாக விற்குமிடத் தைத் தெரிய ஆசை. எங்கும் அணுவிற்கு இரண்டு காய்க்குமேல் கிடைக்காதபோது மூன்று என்ருல் ஆசை பிறக்காதா? அவரும் ஆசைக்கு அடிமையான மனிதர். குனிந்து பார்த்தார். கடைக்குப் பின்னல் நின்ற வாழைக் காய் ஏற்றிய பார வண்டியில் இரண்டு பயல்கள் காய் பிய்த்து, தூக்கிக் கட்டிய வேட்டியின் பின்பக்கம் போட்டுக் கொண்டிருந் தார்கள். அதாவது அவர்கள் பாரவண்டியில் திருடி, திருடிய காய்களை அணுவிற்கு மூன்று விற்கிருர்கள். முதல் போடாத முதலாளிகள் என்பதை அறிந்தார். " சை திருட்டுப் பயல்கள் என்று காறி உமிழ்ந்தார். இன்னும் கடைக்காரர் வெளியே வரக்கானேம். அதனல் அடுத்த கடைக்கு நகர்ந்தார். பின்பக்கமிருந்து சோதாக்களின் குரல் வந்தது. டேய் விற்கிற காசை எங்கே வைக்க ? அந்தப் படுபாவி ரத்தினம் வந்தால் பிடுங்கிக் கொள்ளுவானே? - ஆமாடா விற்க விற்கக் காசைக் கொண்டுபோய் காந்தி சிலை இருக்கிறதே அதன் வலது தோளில் வைத்துவிடு; நான் வந்து செளகரியம்போல எடுத்துக்கொள்ளுகிறேன் என்ருன் மற்றவன். இருப்பு முறம் நிறைய நெருப்பை அள்ளி இராமா மிர்தம் நெஞ்சைத் திறந்து கணகணவெனக் கொட்டியது போல இருந்தது. காந்திஜி சிலையின் வலது தோள், காத்திரஜ் பெட்டி: திருடும் சிறுவர்களுக்குப் பணப்பெட்டி காந்திஜி சிலையா? இராமா மிர்தம் திடுக்கிட்டுப் பார்க்கவும் இரு பயல்களும் ஓடிவிட் டார்கள். அவர்கள் வேட்டிக்கட்டு மடிப்போடு முழங்காலுக்கு மேலாக இருந்தது. பை போன்ற அதில் வாழைக்காய்கள் கனத்துக் கிடப்பது தெரிந்தது. நகர மன்ற உறுப்பினர் யோசித்தபடி நடந்தார், காய்கறி வாங்க வந்த காரியம் சிறி தாகப்பட்டது. அவர் நினைப்பு காந்திஜி சிலைமீது புதிந்தது, அப்பக்கமாக வந்துகொண்டு இருந்தார். அழுக்குத் துணி கட்டிய சிறுவன் அந்தச் சிலைக்கு அருகாக வாழைக்காய் கிடை போட்டிருந்தான். அத்தனையும் சிதறிய காய்கள் ஒன்றுகூட,