பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 சிலையும் சிந்தனையும் சீப்பாக இல்லை. எதிர்க்கடையில் அமர்ந்து இராமாமிர்தம் பையன் வியாபாரத்தைக் கவனித்தார். அந்தப் பையன் கொண்டுவரும் காய்களுக்கு முன்கூட்டியே கிராக்கி நின்று கொண்டிருந்தது. அவன் வருகைக்காகப் பலர் காசும் கையுமாக நிற்கிருர்கள். பையன் ஐந்து விநாடிக்கு ஒருமுறை எழுந்துபோய் காந்திஜி சிலையைத் தொட்டுவிட்டு வந்தான். இராமாமிர்தத்திற்குச் சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை. பத்து நிமிடம் சென்றதும் சாயவேட்டி கட்டிய முரட்டு உருவம் (ரெளடி ரத்தினம்) வந்து திருட்டுப் பயலே என்னடா வியாபாரம் ஆச்சுது?’ என்று கேட்டபோது சின்னப் பையன் கையை விரித்தான். இன்னும் போணியே ஆகவில்லையாம். பெரிய சோதாவிடம் பயந்து பொய் சொல்லுகிருன் என்பதை அறிந்துகொண்ட இராமாமிர்தம் இன்னும் சிறிது வேடிக்கை பார்க்க இருந்தார். ரெளடி ரத்தினம் போய்விட்ட பின்னர், சின்னப்பயல் ஒருவன் வந்தான். அவன் குரலைத்தான் கேட் டிருக்கிருரே; பெரிய அண்ணே, ரத்தினம் வந்தார். ரப்பா பேசினர்.

  • காசைப் பிடுங்கிப் போயிட்டுதா ? , ஏக்கம் ஏற்றமாகத் துடித்தது. ફ્ર

இல்லை காந்தி சிலையில்ே வலது தோள்பக்கம் காசு இருக்குது. போய் எடுத்துக்கோ. நமக்கு இன்னிக்கு ராவுலே ஏக ஜல்சா, பிரியாணியும், சினிமாவும் மறந்துவிடதே." மறப்பேன?’ என்றபடியே வந்த பயல் காந்தி சிலையை நெருங்கின்ை. x அவர் உள்ளம் கொதித்தது. காந்திஜியின் சிலே, இவர்கள் திருட்டுக்கு திருட்டுக்காய் விற்ற காசுக்கு இருப்புப் பெட்டி யாகப் பயன்படவா? ஐயோ நகராட்சியில் கரடியாகக் கத்தி காந்தி சில வேண்டுமென்று அவர் கேட்டார் ? கிளர்ச்சி செய் தார். பிரதிஷ்டை பண்ணினர். சை முட்டாள்கள் நிறைந்த உலகம் என்று கத்தினர் இராமாமிர்தம்: என்னங்க கெளன்சிலர் ஐயா திட்டுறிங்க ? என்ருர் பல சரக்குக் கடை முதலாளி. -