பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 அன்னையும் பிதாவும் இவ்வாறு விஷயம் ஒத்திவைக்கப்பட்டது. பங்கஜத்தினிடம் உண்மையைச் சொல்லிவிடத் தீர்மானித்து, எவ்வாறு முடிந் தாலும் சரியென்று எண்ணினன், ஆனால் பிறகு அந்தத் தீர் மானத்தை நிறைவேற்றும் தைரியம் வரவில்லை. என்னத்திற்காக நான் இதைச் சொல்லவேண்டும் ? சொன்னல் என்மேல் பங்கஜத்திற்கும் கோவிந்தராவுக்கும் வெறுப்பு உண்டாகும். சாதி வித்தியாசம் பார்ப்பதில்லை என்று அவர்கள் சொல்லுகிரு.ர்கள். ஆயினும் நான் பறையன் என்பது தெரிந்தால் ஒருகாலும் சம்மதியார்கள். தவிர, பொய் சொன்ன வளுவேன் என்றிவ்வாறு தனக்குள் ஆலோசிக்கலானன். மறுநாள் மறுபடியும் யோசித்து, உண்மையைச் சொல்லி விடலாம் என்று கோவிந்தராவின் வீட்டுக்குப் போனன். ஆனல் போகும் போது, ' நாம் இருவரும் பிரியப்பட்டிருக்கும் போது, இந்தச் சாதிப் பிரச்னைக்கு என்ன இடம் ? இந்த அநியாயத்தை நாம் ஏன் இடங்கொடுத்து வளர்க்கவேண்டும் ? இந்தச் சாதியை யார் நிர்மாணித்தார்கள்? அது சுத்தப் பொய்யல்லவா? அவளிடம் நான் ஏன் அதை ஒரு பொருளா கக் கருதிச் சொல்ல வேண்டும் ? அதைச் சொல்லிக் காரியம் முழுதும் கெட்டுவிடவா செய்வது ? அவர்களும் சாதியைப் பற்றிக் கவலையில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதற்குமேல் நான் ஏன் அதைப் பற்றிப் பேச வேண்டும்? ' என்று மன தைச் சமாதானப்படுத்திக் கொண்டு உண்மையை மறைக்கத் தீர்மானித்தான். பங்கஜம், உண்மையில் உனக்கு இஷ்டமா? நாமிருவரும் கூடி வாழலாமா? " என்று மட்டும் கேட்டான். உங்களுக்கு இஷ்டமா ? ' என்ருள் பங்கஜம். 3 அர்த்தநாரியின் தகப்பனர் முனியப்பனும், தமையன் ரெங்கனும், தாயார் குப்பாயியும் கோக்கலைச் சேரியிலேயே இருந்தார்கள். அர்த்தநாரி டில்லியிலிருந்த போதும், பிறகு பெங்களுருக்கு வந்த பின்னும், மாதம் தவருமல் இருபது ரூபாய் அவர்களுக்கு அனுப்பி வந்தான். அவர்களும் அதைக் கொண்டு வெகு சந்தோஷமாகக் குடும்பம் நடத்தி வந்தார்கள். பையனுக்கு என்ன சம்பளம் என்பது அவர்களுக்குத் தெரியாது. மாதா மாதம் இருபது ரூபாய் அவர்களுக்குப் பெரிய சம்பத் தாக இருந்தது. ஆனல், முனியப்பனுக்கு வெகு நாளாய்க் குடிப் பழக்கம். மாதா மாதம் தவருமல் பணம்வர, குடி இன்