பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/412

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 40 ராஜியின் கணவன் ரிஜி எழுந்து வரும்போது மாதவன் பரணில் இருந்து எதையோ எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தான். காலை உதயத் தில், மணம் பரப்பி எழில் பொங்க மலரும் புத்தம் புது மலர் எனக் காட்சியளித்த அவளை அங்கிருந்தே கண்கொட்டாமல் பார்த்தான் அவன். அதற்குள்ளாகவா எழுந்து விட்டீர்கள் ? என்ன அவசர மாம் ? எனக்கு முன்பே எழுந்து... ' நாணத்தின் பூச்சேறிய முகம் சற்றே சிணுங்கிற்று. அம்மாவும் நானும் அதிகாலை நாலு மணிக்கே எழுந்து விடும் பழக்கமுடையவர்கள் ராஜி !... '

  • * எழுந்து ?... **

அவள் புருவங்கள் கேள்விக் குறியில் வளைந்தன: " ...காலைக்கடன் முடித்து, பிரார்த்தனை செய்வோம். அப்புறம் வீட்டு வேலைகள். ' பூஜையறையின் நுழை வாயிலில் மாட்டப் பட்டிருந்த மகாத்மாவின் பெரிய படத்தில் மலர் மாலை, காலை இளங்காற்றில் இலேசாய் அசைந்தாடிற்று, உள்ளே சுடர் விட்ட ஐந்து முகக் குத்து விளக்கு; ஊதுபத்தியின் மணம். - - அப்போது தான் இவையனைத்தையும் கவனித்த அவள் முகத்தில் ஆச்சரியம்: - w - ‘. . . -