பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/413

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 ராஜியின் கணவன் ஆமாம். அதிகாலையில் அங்கே என்ன தேடும் படலம் ? ' அவள் ஏணியைப் பற்றியபடி அவனை நிமிர்ந்து நோக்கிள்ை. 'இதோ, இதைத் தான் !... காலை வேளையில் இதன் அவசி யம் இப்போது தேவைப் படுகிறது... ' என்று கூறியபடியே அவன் நீட்டிய பொருளை எட்டி வாங்கிள்ை ராஜி. அவள் வியப்பு இரட்டிப்பாகி வினவாயிற்று. 'இப்போது தான் இதன் அவசியம் தேவைப் படுகிறதா ?... அப்படியானல்.... இத்தனை நாளும் ?.... ’’ நாக்கில் துடித்த சொற்கள் நழுவி விழுந்தன. நாங்கள் காபி சாப்பிடுவதில்லை ராஜி 1. ’’ அவன் சிரித்தபடியே கீழே இறங்கினன். ' எனக்கு என்று எதையுமே தனியாகச் செய்ய வேண்டாம். காபி இல்லையானல், ஒவலோ, போர்ன்வீடாவோ, காலையில் நீங்கள் சாப்பிடுவதையே நானும்.... ' அவள் கூறி முடிப்பதற்குள் அவன் கண்ணுடிக் குப்பி உடைந் தாற்போல் சிரித்தான்: - ' ஊஹூம் 1.. அது மாட்டுப் பெண் நீ 1. நாங்கள் சாப்பிடு வதையெல்லாம் உனக்குத் தர முடியுமோ ?... உனக்கு உன் வீட்டு வழக்கப்படி காபி தான் !... ' அவள் முகம் விழுந்து போயிற்று; அவன் குறும்பாய்ச் சிரித்தான். ' என்னடா நீ?... புதிசு, பழசு என்று அவளுடன் வம்பு செய்கிருய்... நீ தப்பாக எடுத்துக் கொண்டு விடாதேயம்மா ராஜி 1. அவன் அப்படித்தான். கேலியும் கிண்டலும் தான் முழு மூச்சு... ' அக்கணம், அங்கே பிரவேசித்த அவள் மாமியார் வாஞ்சை யுடன் ராஜியை நோக்கிள்ை. அவளுக்கு வெட்கம் மிகுந்தது. கணவரும் மாமியாரும் காலையிலேயே எழுந்து அலுவல்களில் ஈடுபட்டிருக்கையில், அவள் மட்டும் தாமதமாய் துயில் கலந்து வந்தது அவளுக்கு என்னவோ போலிருந்தது. சிவந்த முகத் துடன் கையிலிருந்த பற்பசையையும் தூரிகையையும் கணவரிடம் நீட்டினள் அவள். எல்லாம் ஆயிற்று. நான் உபயோகிப்பது அதோ அந்த பிரஷ் 'தான் !...”