பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 409 மாதவன் சுட்டிய திசையில் கப்பும் கிளையுமாய் ஒரு பெரிய வேப்பமரம் காட்சியளித்தது. ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி ! ’’ ஆரம்பப் பள்ளி மாணவனைப் போல அவன் நீட்டி முழக்கி ன்ை புன்னகையில் அவள் கன்னம் குழிந்தது: பல் தேய்த்து விட்டு சமயலறையில் நுழைந்த போது பரணி லிருந்து எடுத்த பில்டர், பளபளவெனத் துலக்கப்பட்டு, டிகாக் ஷன் நிரப்பப் பெற்றிருந்தது. காபியைக் கலந்து ஆவி பொங்க அவளிடம் கொடுத்தாள் மாமியார். 'இன்றைக்குத் தூங்கிப் போய் விட்டேன். நாளை முதல் சீக்கிரமே எழுந்து, காபிக் கொட்டை அரைத்து வைக்கிறேன்...' என்ருள் ராஜி. ' காபிக் கொட்டை அரைக்கப் போகிருயா?...' கனகம்மா மெல்லச் சிரித்தாள். ...இனிமேல் தான் நம் வீட்டில் கைமெஷினும், ரோலரும் வாங்க வேணும் ராஜி. இது கடைப் பொடிதான். டவுனுக்குப் போய் மாதவனே காபிக் கொட்டையும் மெஷினும் வாங்கி வரச் சொல்கிறேன்... ' கனகம்மா கபடற்றுப் பேசிளுள். கடைப் பொடியா ? !. ராஜிக்கு வயிற்றைப் புரட்டியது: ஊரில், அவள் அம்மா உயர்ந்த ரக பீபரிக் கொட்டை வாங்கி, பொன் போல் ரோலரில் வறுத்து, அவ்வப்போது காலை யில் மெஷினில் போட்டு அரைத்து, மணக்க மணக்கக் காபி போடுவாள். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் போலிருக்கும் அந்தக் காபியின் மணமே அலாதி தான். அந்த மணம் நாசியில் எட்டியபின்தான் அவள், படுக்கையிலிருந்து எழுவாள். இங்கே?... அவளுக்கு மட்டும் தான் அந்த திரவம் ... வேண்டா வெறுப்பாக அவள் காபியைக் குடித்து முடிப்பத்ற் குள் மாதவன் குளித்து விட்டு வந்தான். திருநீறு துலங்க, துல்லியமான ஆடைகளுடன் அவனைக் கண்ட போது அவள் திகைத்துப் போளுள். அவள் இன்னும் பாய்லர்’ போட வில்லையே! - அடுத்து மாதவன் செய்த் காரியம் அவளுக்கு மேலும் அதிர்ச்சி தருவதாயிருந்தது.