பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 10 ராஜியின் கணவன் வெள்ளித் தட்டத்தில் பழையமுதைப் பிழிந்து வைத்து, ஆடைத் தயிரை ஊற்றினுள் கனகம்மா. விரலிடுக்கில் தயிர்ப் பசை நூலாய் வழிய கமகம வென கடாரங்காய் மணத்துடன் உணவை ருசித்துச் சாப்பிட்டவய்ை ராஜியைப் பார்த்து விஷம மாய்க் கண் சிமிட்டின்ை மாதவன். . . புது மாட்டுப் பெண் நீ! நாங்கள் சாப்பிடுவதையெல்லாம் உனக்குத் தர முடியுமோ ?... ' உதடுகளில் சப்தமற்ற சிரிப்பு வழிய சன்னக் குரலில் கூறி ன்ை அவன், ஆம். ராஜியின் வீட்டில் அஞ்சலை கூட தண்ணீர் விட்ட சாதத்தை விலக்கிச் சுடுசோறு தான் கேட்பாள். இங்கே எல்லாம் அவளுக்குப் புதுமையாக இருந்தது. அவளுக்காகத் தான் குளிக்க வெந்நீர் போடப் பட்டது. அவளுக்கு என்று பிரத்யேகமாய் டிபன் செய்தோ, வாங்கியோ தரப் பட்டது. பெரிய இடத்துப் பெண். நேற்றுத் தான் இங்கு வந்திருக் கிருள். நம் வழக்கம் அவளுக்குப் பிடிபடும் வரை அவர்கள் வீட்டில் நடப்பது போல், செய்து விட்டோமானல், புகுந்த இடம் அவளுக்குச் சிரமம் தராது, என்று கனகம்மா மருமகளுக்குப் பிரத்யேக சலுகைகள் அளித்து எதையும் பார்த்துப் பார்த்துச் செய்து வைத்தாள். ஆயினும் ராஜிக்குப் புக்ககத்துப் பழக்க வழக்கங்கள் புதுமை யாக இருந்தன. அதிகாலையிலேயே எழுந்து விடுவதும் அலுப்புச் சலிப்பில்லாமல் உழைப்பதும், ஏழைமையில்லாதிருந்தும் எளிய வாழ்வு வாழ்வதும், தேவைகளைக் குறுக்கிக் கொள்வதும்... அடுத்தாற் போல், ஆறு மாதங்களுக்கு முன் மணமான அவள் அக்காவின் வீட்டில் அவள் எப்படியிருக்கிருள் ! அப்படி ஒன்றும் ஒகோ என்று உயர்த்தியான குடும்பமும் இல்லை; வேலை யும் இல்லை. அத்திம்பேருக்கும் அவர் அப்பாவுக்குமாகச் சேர்த்து ஐநூறு ரூபாய் வருகிறது. உடுத்திய உடை நலுங் காமல், கிடைத்த கெளரவத்தை விடாமல், நாலுபேரை அதிகாரம் பண்ணிக்கொண்டு நாகரீகமாக வாழ்கிருர்கள். இந்தக் காலத்திலும் இப்படி ೭೯puafಹಷಿ7 ராஜி இங்கு தான் இந்த வீட்டில் தான் பார்க்கிருள்: விடியற்காலயில் எழுகை; தொழுகை; பின்னர் தொழுவத் தில் மாடுகள் பராமரிப்பு, தோட்டவேலை, வேலைக்காரர்களை