பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/416

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 4.1.1 விசாரிப்பு...இப்படி ஒன்பது மணிக்குள் ஒயாத வேலைகள்: நியமம் தவருமல் காரியங்களை நடத்தி விட்டு உரிய நேரத்தில் பள்ளிக்குச் சென்று விடுவான் மாதவன். உள்ளூரிலேயே உயர் நிலைப்பள்ளி யொன்றில் தலைமையாசிரியராய் இருந்தான் அவன்; பாதி நாட்கள் பக்கத்துக் கிராமத்தில் நூற்புயக்ளும், சேரியில் காரியம் என்று வெளி வேலைகள் வேறு. மாதவன் தான் இப்படி என்ருல் கனகம்மாவோ?...மாடும் கன்றும் வீடும் வாசலும் வேலைகள் கொள்ளை கொள்ளையாய்க் காத்திருக்கையில் இந்தத் தள்ளாத வயதிலும் வேலைக்கு ஆளின்றி எப்படித்தான் சமாளிக்க முடிகிறதோ ? ராஜியின் பிறந்தகத்தில், அஞ்சலை ஒருவேளை வரவில்லை என்ருல் வீடு அல்லோலகல்லோலப்படும். ஆங்காங்கே தோய்க் கப்படாத துணிகள் : தேய்க்கப்படாத பாத்திரங்கள் : வழ வழக்கும் சிமெண்டுத் தரையில் அடியடியாய்த் தூசிகள், வீடு ஒரே களேபரம் தான் ! ராஜியின் அப்பா ஒரு உயர்தர உத்தியோகஸ்தர். அந்த அந்தஸ்துக்குத் தக்கபடி தானே அவர் குடும்பத்தார் சமூகத்தில் நடமாட வேண்டியிருக்கிறது ! அவர்களுடைய தகுதிக்கு, வீட்டில் சமையலுக்கு ஆள் இல்லை என்ருலே நாலுபேர் நகைப் பார்கள். அப்படியிருக்க அஞ்சலையின் வேலையை அவர்களால் எப்படிச் செய்ய முடியும் ? w பிறந்தகத்தில் ராஜி கால்ை ஏழு மணிக்கு மேல் தான் எழுவாள். எழுந்து காலைக் கடன் முடித்து, காபி அருந்திய பின், ஏதாவது படித்துப் பொழுது போக்குவாள். ஒன்பது மணிக்குச் சாப்பாடு. மதியம் 2 மணிக்கு காபி, டி.பன். தினமும் ஏதாவது ஸ்வீட்: பூரி தோசை, பஜ்ஜி என்று இரட்டை டி.பன். மாலை ஐந்து மணிக்கு டீயுடன் ஏதாவது பழங்கள். இரவு எட்டரைக்கு உணவு. - - - அப்பாவுக்கும் குழந்தைகளுக்கும் விடுமுறை நாளானல் கேட்கவே. வேண்டாம். சினிமா, டிராமா, கடற்கரை என்று ஊர் சுற்றிவிட்டு வீடு திரும்பினல், படுக்கப் பத்தரைக்கு மேலாகிவிடும். - ஆனல்... இங்கேயோ? பழையமுதை * அமுதாய் பாவித்துச் சாப்பிட்டு விட்டு மங்கு மங்கு என்று உழைக்கிருர்கள் இவர்கள்! அவளால் அப்படி இருக்க முடியுமா?... .