பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/417

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 ராஜியின் கணவன் ஆனல் யாரும் அவளை எதற்குமே கட்டாயப் படுத்த வில்லை ராஜிக்குத் தான் தனக்கு மட்டும் அளிக்கப்படும் சலுகை சஞ்சலத்தைத் தந்தது. - 兴 - 景 景 மாதவனை ராஜிக்குக் கணவகைத் தேர்ந்தெடுக்கையில், அவள் அப்பாவிற்குச் சிறிது தயக்கம் தான். பட்டணவாசத் தில் அருமை பெருமையாய் வளர்ந்த பெண், கிராமத்து ஆசிரியருக்கு வாழ்க்கைப் பட்டு வசதியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியுமா என அவர் யோசிக்கவே செய் தார். ஆனால் மாதவன், அளவற்ற ஆஸ்திகளுக்கு ஒரே வாரிசு என்பதை அறிந்த போது அவர் மனம் ஆறுதல் அடைந்தது. மாதவனின் அழகு மிக்க தோற்றம் ராஜியைப் பெரிதும் கவர்ந் தது. ராஜியின் தாய்க்கு, கனகம்மாவின் களங்கமற்ற சுபாவம் மிகவும் பிடித்தது. இவையெல்லாவற்றையும் விட ராஜிக்கு அங்கே முடி போட்டிருந்தது. கல்லூரிப் படிப்பை உதறி விட்டு, பள்ளி ஆசிரியரைக் கைப் பிடித்தாள் ராஜி. விடுமுறை நாட்களில் கணவருடன் பக்கத்து டவுனுக்கு சினிமா பார்க்கப் போக அவள் உள்ளத்தில் ஆவல் துடிக்கும். ஆளுல் அந்தத் தினங்களில் எல்லாம் மாதவனுக்குக் கொள்ளை அலுவல்கள் குவிந்து கிடக்கும். கொல்லையில் நந்தவனமும், சுந்தரக் காடுமாகத் தோட்டம் பாழ்போகிற்தே ! கொத்து வெட்டு என்று பாத்தியில் இறங்கி விடுவான். மாட்டைக் குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் பூசி, கொட்டில் கழுவி... வாசலில் பள்ளிச் சேவகன் காத்திருப்பான் ஏதாவது ஒரு மாணவனின் பெற் ருே ர், உதவி ஆசிரி ய ர் க ளி ல் இரண்டொருவர்...ஊர்ப் பிரமுகர்கள் சிலர். இப்படி எவராவது மாதவனின் பேட்டிக்காகத் திண்ணையில் காத்திருக்கையிலும் கூட, கலைந்த கிராப்பும், வியர்வை வழியும் முகமுமாய், தட்டுச் சுற்ருகக் கட்டியிருந்த வேட்டியும் பனியனு மாய் மாதவன் அவ்ர்களுக்குப் பேட்டிதருவான். " ...தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தீர்கள் போலிருக்கு ! என்னிடம் சொல்லியிருந்தால் வகுப்புப் பையன்களில் சில பேரை அனுப்பியிருப்பேனே?...' என்பார் ஒரு ஆசிரியர். " ..நான் இங்கனே தானே அரைமணியா நின்னுக்கிட்டு இருக்கேன்...ஒரு குரல் கொடுத்தா ஒடிப்போய் செய்துடமாட் ?' என்பான் சேவகன், .