பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/418

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 413 ராஜிக்கு அவமானம் உடலை அனலாய்த் தகிக்கும். தனக் காக இல்லாவிட்டாலும், பிறருக்காகவாவது சுயமதிப்பைப் பாராட்ட வேண்டாமா ? தன் அந்தரங்கத்தைத் தனிமையில் அவள் மாதவனிடம் சொற்களாய் வடிப்பாள்.

  • எது அகெளரவம் ராஜி ? நம் வேலையை நாமே செய்து கொள்வது மதிப்புக் குறைச்சலா?...அல்லது எதற்கும் பிறர் கையை எதிர்பார்ப்பதா ?...'

அவன் அவளை மெளனியாக்கி விட்டு, பாத்திக்கு நீர் பாய்ச்சப் புறப்பட்டு விடுவான். அபூர்வ மனிதர்கள் ! உணவில் தான் எளிமை என்ருல், உடையிலும் கூட அதே எளிமை. தேவைக்கு அதிகமான எந்தப் பொருளும் வீட்டில் இடம் பெருது. முப்பது வயது இளைஞன் மாதவன் : புது மணம் புரிந்து கொண்டவன். உல்லாச வாழ்விலும், சல்லாப நோக் கிலும் விதம் விதமாய் உடையணிவதிலும் ஆசை இராதோ ? 张 அன்று... பிறந்தகத்திலிருந்து வந்த செய்தியுடன் ஆவல் பொங்க மாதவனிடம் ஓடினுள் ராஜி: ' என்ன ராஜி? ' " நாளைக்கு அண்ணு வருகிருளும்! ...' ' எனக்கும் கடிதம் வந்தது...' அத்திம்பேரும் கூட வருகிருராம் !...” அவரும் கூட எழுதியிருக்கிருர்...வரவேற்க ஆவன செய்யப் படும்...' ...அது சரி ...நாளைக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள்.அவள் பார்வை கெஞ்சிற்று'. " ...வேட்டி, ஜுப்பாவை விடுத்து, உன் அத்திம் பேரைப் போல் ' பான்ட் போட வேண்டுமாக்கும்.!...' 'அது இயலாதது என்று எனக்குத் தெரியும்.உங்களிடம் தான் அப்படிப்பட்ட உடையே இல்லையே?...”