பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/419

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 ர்ாஜியின் கணவன் ... பின்னே ?...' " ..நாளேக்கு ஒரு நாள் மட்டும் நீங்கள் காலையில்... அவள் பார்வை தயக்கத்துடன் அவனே நோக்கி இறைஞ்சிற்று. அவனுக்குப் புரிந்தது. அவள் கரத்தைப் பற்றித் தன் மார்புடன் அணைத்துக் கொண்டான் அவன். - அசடு...இது அகெளரவம் என்ரு நினைக்கிருய் ...உடலுக்கு நல்லதைச் செய்யும் உணவும், உள்ளத்துக்கு நன்மை பயக்கும் செயலும் எதுவாயிருந்தாலும் கேவலமில்லை. உழைப்பது கேவலம் என்ருல், உலகம் தழைப்பதுவும் சாத்தியப் படாது ; உயரிய கலைகளும் கட்டடங்களும் கூட உருவாக முடியாது ; சதுப்பு நிலங்களைக் கூட விளைவிக்கும் தனிப் புகழ் கொண்டது உழைப்பு ; காடுகளையும் மேடுகளேயும் கூட மாட மாளிகை களாகச் செய்யும் சக்தியுடையது உழைப்பு. வளமார்ந்த சமுதாயத்துக்கு அஸ்திவாரம் இளமையின் சலியா உழைப்புத் தான்?...”* அவன் ஒரு குட்டிப் பிரசங்கமே செய்து முடித்தான். அதற்கு மேல் அவளுக்குப் பேச என்ன இருக்கிறது ? - ஆனலும் கஞ்சப்பிரபுவடி ராஜி உன் கணவர் ' என்று அண்ணு கேலி செய்யத் தான் போகிருன் , அத்திம்பேர் இளக் காரமாய்ப் பார்வையை வெளியிடுவார். அவளுக்கு ஊமை கண்ட கனவாய் வேதனை அரித்தது. அந்த நாளும் வந்தது ; அவள் பயந்தது உண்மையாயிற்று. 始 # 景 அண்ணு சிரித்தபடியே அவள் எதிரில் வந்து அமர்ந்தான். ஆம்; ராஜியைப் பார்க்க வந்தவன் அப்படியே அவளை மறு வீடு அழைத்து வந்திருந்தான். சில மாதங்களே ஆயினும் ராஜியின் பிரிவு அவர்களே மிகவும் பாதித்திருக்க வேண்டும். அப்பா மெலிந்து காணப்பட்டார்; அம்மா கூடச் சோர்ந்திருக் கிருளே ! குழந்தைகளும் அப்பாவும் அவளேக் கண்டதும் அன்புடன் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். அம்மாவுக்கு எதிலும் ஒரு நிதானம். உணர்ச்சிகளை உண்டாக்கி, அன்பை ஆசை பொங்கும் பார்வையால் மட்டுமே வெளிப்படுத்தும் சாமர்த்தியம் அம்மா வின் தனித்துவம். 'அம்மா! விஷயம் தெரியுமோ உனக்கு ராஜியின் வீட் டில் இந்தக் கண்ட கண்ட பானங்களையெல்லாம் கையால் கூடத்