பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜாஜி 25 னும் அதிகமாய் விட்டது : இது ரெங்கனுக்குப் பிடிக்கவில்லை. ஆயினும் அவளுல் தடுக்க முடியவில்லை, தடுத்தாலும் என்ன பயன்? ரெங்கன் ஒரு பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருந்தான். அவனுக்கு இன்னும் கலியாணமாகவில்லை. ஓர் இடம் பார்த்துச் செய்துகொள் என்று தாயார் வற்புறுத்து வாள். இப்போது வேண்டாம், கொஞ்ச நாள் போகட்டும் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். அர்த்தநாரி பெங்களுருக்கு வந்தபின், வருஷத்திற்கு இரண்டு தடவை கோக்கலைக்கு வந்து தன் தாய், தகப்பன், அண்ணன் இவர்களைப் பார்த்துப் போவான், தகப்பனர் குடிப்பதைப் பார்த்து அர்த்தநாரியின் வெட்கத்திற்கும் வெறுப்புக்கும் அளவேயில்லை. வீட்டிலுள்ள அசுத்தமும் அவல்ை தாங்க முடிய வில்லை. வந்து ஓரிரண்டு நாளிருந்து விட்டுச் சீக்கிரம் திரும்பிப் போய் விடுவான். " உன் கூட நாங்களும் வந்து விடுகிருேம் ' என்பான் தகப்பன். முடியவே முடியாது. உன்னைக் கண்டால் என்ன வேலை யிலிருந்து நீக்கி விடுவார்கள் ' என்பான் அர்த்தநாரி. ஆமாம் அப்பா, நாமெல்லாம் அங்கே போகப்படாது ' என்பான் ரெங்கனும், செலவுக்கு அனுப்பி வந்தபடியால் இதைப்பற்றி அதிகம் விவாதம் செய்ய மாட்டார்கள். இப்படியே நடந்து வந்தது. தான் பங்கஜத்தை விவாகம் செய்துகொண்டு மறுபடியும் வடக்கே போய்விடலாம் என்பது அர்த்தநாரியின் யோசனை. இவ்வளவு அன்பாக இருந்தாலும் நான் பறையன் என்று இவர்களுக்குத் தெரிந்து விட்டால் காரியம் நிச்சயமாகக் கெட்டு விடும். ஒருவேளை அப்படியில்லை யென்ருலும், ஐயோ, என் தாயையும் தகப்பனையும் அவர்கள் வாழ்வையும், நடவடிக்கை யையும் இவர்கள் நேராகக் கண்டால், அப்புறம் பங்கஜம் என்னைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கமாட்டாள்' என்று அர்த்தநாரி தனக்குள் சொல்லிச் சொல்லிப் பயந்து தன் பொய்யை உறுதிப்படுத்திக் கொண்டான். சீக்கிரமே விவா கத்தை முடித்துக்கொண்டு வடக்கே எங்கேயாவது ஓர் இடத் துக்குப் போய்விடவேண்டும் என்று தீர்மானித்தான். இது சம்பந்தமாய்த் தன் முதலாளி கம்பெனிக்குக் கடிதங்கள் எழுதி, டில்லிக்காவது, வடக்கே வேறு எங்கேயாவதுள்ள அவர்கள் மில்லுக்கு மாற்றிவிடுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொண்டான்,