பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/421

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 ராஜியின் கணவன் ராஜிக்கு முதலில் கொடு அங்கே போனல் அவளுக்குக் கிடைக்காது ' என்று அப்பா, அண்ணு இவர்களிட மிருந்து, இவ்வித சொற்களுடன் கலந்து தான் கிடைத்தன. ' காபியை அதிகம் கொடுத்துப் பழக்கப் படுத்தி விடாதே அம்மா! அப்புறம் அக்கா அங்கே போனுல் திண்டாடப் போகி ருள் !...” என்பான் தம்பி. ராஜிக்கு அழுகை குமுறிக் கொண்டு வரும். இங்கே, அவள் அனுபவிக்கும் ஒவ்வொரு சுகபோகமும் அவள் புகுந்த இடத்துக்குச் சிறுமையளிப்பதாக இருக்கையில் அவள் மட்டும் அவற்றை அனுபவிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது ! ராஜிக்குப் பிறந்தகத்தில் காபி கசந்தது இனிப்புப் பண்டங் கள் கேலிச் சொற்களின் பின்னணியில் நாவிலும் மனதிலும் உறைத்தன. இருபது வருடங்களுக்கு மேலாகத் தனிச் சலுகை யுடன் செல்வத்திலும் செல்லத்திலும் திளைத்த பிறந்தகம் திடீ ரென்று முள்ளாய் உறுத்திற்று. உடனடியாகப் புக்ககம் போகத் துடித்தாள் அவள். ஆனல் திடீரென்று அத்திம்பேருக்கு உடல் நலமில்லை என்று செய்தி வந்து அப்பா பட்டணம் புறப்பட்டுப் போனர். அவர் வந்ததும் போகலாம் என்றிருந்தாள் ராஜி. " நான் வந்ததும் போகலாம் ராஜி ! உன் உடம்பு இளைத் துக் கறுத்து விட்டது. நல்ல ரெஸ்ட் எடுத்துக் கொண்டு போகலாம். போகும்போது நல்ல வேலைக்காரியாகப் பார்த்துக் கூடவே அழைத்துக்கொண்டு போ ! அனல் வீச்சுக்களாய் அப்பாவின் சொற்கள் ராஜியின் நெஞ் சில் சுட்டன. தனிமையில் அம்மாவிடம், மனம் வெதும்பி, வெடித்துத் தீர்த்தாள். ! அங்கே அவர்களுக்கு வசதியில்லாததாலா ஆள் வைத்துக் கொள்ளவில்லை. அம்மா! போலி கெளரவத்துக்கு அடி பணிவ தால் வீண் செலவுகள் தாம் மிஞ்சும் என்பதை அறிந்து உழைப் பின் உன்னதத்தை உணர்ந்தவர்கள் அவர்கள். வயதையோ, மதிப்பையோ பாராட்டாமல் வளம் பெற உழைத்து, காந்தி யடிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றுபவர்கள். சுதந்திர பாரத நாட்டின் சீரிய வளர்ச்சிக்குச் சிக்கனமும், சிறு தொழிலும் சிறந்ததொரு சாதனங்கள் என்பதைக் கண்டவர்கள். தோட்ட