பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/422

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமா குருமூர்த்தி 4.17 வேலையில் ஈடுபட்டு, காய்கறி, மற்ற உற்பத்தியைப் பெருக்கு வதிலும் மாட்டுப் பண்ணையைப் பேணி, மதலைகளுக்குப் பால் தந்து ஆதரிப்பதும் தான் அவர்களுக்குப் பெருமை. அங்கே யாரும் என்னை அவர்களுடைய கட்டுப்பாட்டுக்கு அடங்கி வரவேண்டும் என்று வற்புறுத்தவில்லை. நானே தான் மனமுவந்து அந்தச் சூழ்நிலைக்கு என்னைப் பழக்கப் படுத்திக் கொள்கிறேன்; உண்மையில், இப்போதெல்லாம் உல்லாச வாழ்வை வெறுத்து எளிய வாழ்வில் தான் இன்பம் காண்கி றேன். சோம்பேறியாக எதற்கும் பிறர் கையை எதிர்பார்ப் பதை விடுத்து சுயதேவைப் பூர்த்தி செய்து கொள்வதைப் பெரிதும் வரவேற்கிறேன். முதல் தடவையாக இப்போது இங்கே வந்திருப்பதால் உங்களுக்கு மன வருத்தம் ஏற்படக் கூடாதே என்பதற்காக இங்கு காபி குடிக்கிறேன். கை கால் கூட அழுக்குப் படாமல் சோபாவில் சாய்ந்திருக்கிறேன். இங்கே அனுபவிக்கும் ராஜ போகத்தை விட அங்கே அவர்களுடன் சேர்ந்து உழைக்கும் எளிய சேவையே எனக்கு நிறைவைத் தருகிறது...' பலே ராஜி பிரசங்கமே செய்து விட்டாயே? அம்மா ! உன் அருமை மகள் சொல்லுவதைக் கேட்டாயா!' அங்கு போய் இன்னும் முழுசாய் மூன்று மாதமாகவில்லை ! உத்தர. விடுங்கள் அம்மணி ! ஒரே நொடியில் நம் வீட்டுத் தோட் டத்தை...”* அண்ணு போலிப் பயத்துடன் கை கட்டி வாய்பொத்தி நின்ருன். இதற்குள் செய்திப் பத்திரிகையுந் தானுமாய் அம்பி ஓடி வந்தான்.

அக்கா! அத்திம்பேரின் தோட்டத்திற்குச் சர்க்காரில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது! அடுத்தவாரம் அங்கேயே வைத்துப் பரிசளிப்பு விழாவாம்!"

இன்ப அலைகள் நுரைத்துப் பொங்கி ராஜியின் இதயக் கடலின் கரையில் ஒதுங்கின. பெருமிதத்துடன் தமையனைப் பார்த்தாள். மறுநாளே அப்பா வந்துவிட்டார். 'எடை குறைய வேண்டும்...எளிமையான உணவு வேண்டும் என்று டாக்டர் கூறுகிருர். மூத்த மாப்பிள்ளைக்கு வயிற்றில் ஏதோ கோளாரும். தினமும் காலையில் தோட்டத்துப் புல் வெளியில் படிந்திருக்கும் பனித்துளியில் அவரே தினமும் எழுந்து சென்று ஒரு அவுன்ஸ் சேகரித்துச் சாப்பிடச் சொல்லுகிருராம். &sr; 27