பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/423

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

418 ராஜியின் கணவன் பட்டண வாசத்தில் தோட்டத்திற்கு எங்கே போவது ? ராஜி யின் வீட்டுக்குத்தான் போக வேண்டும் என்று கீதா சொல்லு, கிருள். அவள் ஊருக்குப் போவதற்குள் அவளைக் கேட்டுத் தகவல் எழுதும்படி சொல்லியனுப்பினள்...' என்று செய்தி கொண்டு வந்தார் அவர். இதற்கு என்னைக் கேட்க வேண்டுமா, அப்பா? கூடவே அழைத்து வந்திருக்கலாமே நீங்கள் ! எங்கள் தோட்டத்து வேப்பமரக் காற்று பட்டாலே வியாதியெல்லாம் பறந்தோடி விடும். மேலும் தோட்டத்துப் புல் வெளியின் பனித்துளி யைச் சேகரித்து ஏன் சாப்பிடச் சொல்லியிருக்கிருர் என்று யோசித்துப் பார்த்தீர்களா? தினமும் காலையில் எழுந்து தானே தோட்டத்திற்குச் சென்று புல் வெளியில் உட்கார்ந்து எழுந்து சேகரிப்பது: ஒரு எக்ஸர்ஸைஸ்' போல. நியமமாய் உழைக்க வில்லையாளுல் இப்படி ஏதாவது உழைப்பில் ஈடுபட்டுத்தான் உடல் நலனைப் பேண வேண்டியிருக்கிறது : ' ராஜியின் மதிநுட்பத்தைக் கண்டு வியந்தார் அப்பா. அண்ணுவின் மூலம் பரிசுச் செய்தியைக் கேட்ட அவர் மகிழ்ச்சி இரட்டை மடங்காயிற்று. “ ரைட்டோ, ராஜி: பரிசளிப்பு விழாவுக்கு எல்லோரும் வந்து விடுகிருேம், கீதாவையும், மாப்பிள்ளையையும் அழைத்து வரும்படி அண்ணுவை நாளைக்கே அனுப்புகிறேன்' என்ருர், பட்டம் பெற்ற ஆசைம்கள் பட்டிக் காட்டில், பாட்டாளி யாய் உழைத்து, கட்டுப் பெட்டியாய் வாழ்கிருளே என்று இப்போது, அவர்கள் வருந்தவில்லை. குடும்ப நிர்வாகத்தில் அடங்கி, உழைப்பின் உயர்வை உணர்ந்து இலட்சிய வாழ்வு வாழும் அவர்களைக் கண்டு மகிழ்வும் நிறைவும் கொண் டார்கள்.