பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/424

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் நாகசண்முகம் 4. அடிச்சுவடு கிரிய பெரிய மனிதனுடைய வெள்ளைப் பற்களைப் போல, இருண்டு கிடந்த வானத்தில் ஒளிக்கீற்றுகள் மின்னிக் கொண் டிருந்தன. இங்கொன்றும் அங்கொன்றுமாக விழத் தொடங்கிய மழைத் துளிகள் அந்தப் பேரொளியில் வைர நெடுங்கம்பிகள் போலக் காட்சி தந்து கொண்டிருந்தன. அந்த ஒளிக்கற்றைகளுக்கு முன்னே, பொன்னியூர்த் தெருக் களில் மின்னிக் கொண்டிருந்த தெரு விளக்குகள் வலுவிழந்து காணப்பட்டன. மற்ருெரு முறை வானம் மின்னிச் சிரித்தபோது அந்தப் பெருஞ் சிரிப்பைக் கண்டு அஞ்சியது போல் மின்சாரம் தன் ஆற்றலை இழக்கவே தெருவிளக்குகள் அணைந்தன. பொன்னியூர் இருள் அரக்கனின் கோரப்பிடியில் சிக்குண்டு விட்டதோ, என்று எண்ணும்படியாக அந்த ஊரை இருள் சூழ்ந்து கொண்டது. . மழை 'சோ'வெனப் பெய்யத் தொடங்கியது. இந்த நிலையில் விலை உயர்ந்த பெரிய கார் ஒன்று' பொன்னி பூர்த் தெருக்களின் ஊடே மண்டிக்கிடந்த, இருளைக் கிழித்துக் கொண்டு ஊரின் தென்புறத்த்ே உள்ள் மூன்று மாடிக் கட்டி டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது: ‘....'. ' பல நாட்களாக நான் கோடை வெய்யிலில் காய்ந்தேன்' ஒரு நள்ளாவது கொட்டும் மழையில் நான் நனைந்து மகிழ்