பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/425

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 அடிச்சுவடு வேண்டாமா ?’ என்று கேட்பது போல அந்த விலை உயர்ந்த கார் மூன்று மாடிக் கட்டிடத்தின் அருகில் வந்ததும் நின்று விட்டது. அதை ஒட்டிக்கொண்டு வந்த இளைஞன் என்ன முயன்றும் காரை இயக்கும் முயற்சியில் வெற்றி பெறவில்லை. எனவே காரைவிட்டு இறங்கிப் பங்களாவை நோக்கி அவன் நடக்கத் தொடங்கினன். உள்ளபடியே தள்ளாடும் நிலையில் இருந்த அவன்ை கொட்டிக் கொண்டிருந்த மழை வேறு தள்ளாடச் செய்தது. எப்படியோ பங்களாவின் வெளிக் கதவுகளே அவன் அடைந்து விட்டான். இரவு மணி ஒன்பதாகியும் அவன் வரவிற்காக அந்தக் கதவுகள் பூட்டப்படாமலிருந்தன. கார் எப்போது வரும் என்று எதிர்பார்த்தபடியே காவற்காரன் அ வ னு க் கா க உருவாக்கப்பட்டிருந்த மரப் பெட்டியின் உள்ளே உட்கார்ந் திருந்தான். அதனல் அவனுடைய முதலாளியான அந்த இளைஞன் வந்ததை அவன் கவனிக்கவில்லை. தள்ளாடியபடியே பங்களாவை நோக்கி நடந்து கொண் டிருந்த அந்த இளம் முதலாளி பங்களா முற்றத்தை அடைவ தற்கு முன்னல் இருந்த சிறிய வீட்டின் அருகில் சென்றதும் நின்ருன். அந்த வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்த கண்ணனும் அவன் மனைவி கமலாவும். பேசிய வார்த்தைகள் அவனை நிற்கும்படி செய்தன. ' மணி என்னங்க ஆகுது ?? ஒன்பது ஆகுது ' இன்னம் அந்தப் பாவி மனுஷனக் காணுமே " நீயே பாவி மனுஷன்னு உண்மையைச் சொல்லிட்டியே அப்படிப்பட்ட ஆளுக்கு நேரமும் காலமும் ஏது கமலம் !...” இந்த இருட்டிலே மைதிலி கைக்குழந்தையோடே எப்படிக் கவலைப் பட்டுகிட்டிருக்காங்களோ " தெய்வமா இருக்க வேண்டிய கணவனே தெருவிற்கு வந்த பின்னலே நாமெல்லாம் என்னதான் உதவி செஞ்சுட முடியும். அந்த அம்மாவுக்குத் தெய்வம்தான் இனித் துணை. இலேசாகத் திறந்திருந்த ஜன்னல் வழியே அந்த இளைஞன் உள்ளே பார்த்தான். தன்னைக் குறைத்துக் கொள்வதன் மூலம் அந்தத் தம்பதிகளுக்கு மத்தியில் இருந்த மெழுகுவர்த்தி ஒன்று