பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் நாகசண்முகம் 421 சிறிய அளவில் ஒளி தந்து கொண்டிருந்தது. அந்த ஒளியில்கூட கண்ணன், கமலம் இருவர் கண்களிலும் கலங்கி நின்ற நீர்த் திவலைகள் பளிச்சென்று தெரிந்தன. சுடரின் சூட்டால் உருகிக் கொண்டிருந்த மெழுகுவர்த்திகூட அவர்கள் கூறிய மைதிலிக் காகக் கண்ணிர் சிந்துவது போல அவனுக்குத் தோன்றியது. உணர்வுகள் மங்கிக்கிடந்த அந்த இளைஞனின் உள்ளத்தில் இந்தக் காட்சிகள் சுரீர் என்று தைத்தன. சவுக்கடிக்கு ஆளான நிலையை அவன் அடைந்தான். அவன் யார் ? 응 공 采 பொன்னியூர் ஒரு சிறு கிராமம் இது பழைய கதை. இன்று, அது ஒர் அழகிய சிறு நகரம். தாலுகா அலுவலகங்கள், கால் நடைப் பராமரிப்பு நிலையம், கோழி வளர்ப்புப் பண்ணை, குடும்பக் கட்டுப்பாட்டு நிலையம், ஆண், பெண்களுக்குத் தனித் தனியே விளங்கும் உயர்நிலைப் பள்ளிகள், காந்தி மகான் பெயரால் விளங்கும் மாபெரும் சேவை அரங்கம், அதன் உள்ளே விளங்கும் பல தொழிற் பிரிவு கள், மாபெரும் நூல் நிலையம்-முதலியன அது ஒரு நகரம் தான் என்பதை நிலைநாட்டிக் கொண்டிருந்தன. தமக்காகவே வாழ்ந்து சுயநலச் சேற்றிலேயே அழுந்தி, அதுவே சுவர்க்கம் என்று எண்ணித் திரியும் மாந்தர் நிறைந்த இந்த உலகில் பிறருக்குச் சேவை செய்வதற்காகவே சிலர் பிறக் கிருர்கள்: அப்படிப் பட்டவர்களில் ஒருவர் தான் இராமநாதன்: இராமநாதன் பருவக்காலப் பணக்காரர். அல்ல. பரம்பரைப் பணக்காரர். > பொன்னியூர்க் கிராமத்திலேயே மாபெரும் மிராசுதாராக விளங்கிய மாணிக்கவேலரின் ஒரே மகன் 1 - இராமநாதன் இளமையிலேயே தந்தையை இழந்து விட்டார் என்ருலும் சிறந்த முறையில் டிடித்து உயர்ந்த வகையில் வாழ்க் கையை அமைத்துக் கொண்டார். х -- - - - - அந்த இராமநாதனின் கடும் உழைப்பால்- தன்னலம் கருதாத தொண்டால்-தான் பொன்னியூர் புகழ் மணக்கும் ஊராக மாறியது. -