பக்கம்:காந்தி வழிக் கதைகள்.pdf/427

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 அடிச்சுவடு இராமநாதன் உள்ளப் பெருவெளியில் காந்தியத் தத்துவங் கள் முளைவிடத் தொடங்கிய போது தான் அவர் சேவையின் சிறப்பை உள்ளவாறு தெரிந்து கொண்டார். அவர் காந்தியடிகளை ஞானகுருவாக ஏற்றுக் கொண்ட பரம சீடராக விளங்கி வந்தார்.

  • தன்நிகரற்ற பெருமகன் ஒருவருடைய தத்துவங்கள் தான் உயிர் பெற்றுச் சமுதாயத்தை வாழவைக்கின்றன; அந்தத் தத்துவங்களின் செயலகத்திற்கே கட்சி பிறக்கிறது. தலைவன் எவ்வழி, அவ்வழி தொண்டர்கள். கட்சித் தலைவனுடைய தூய்மையே கட்சி வாய்மை வழியிலே செல்ல வழி வகுக்கிறது,' என்ற எண்ணங்களை உடையவர் இராமநாதன்.

நல்ல வசதியும் ஏராளமான வாய்ப்புகளும் கொண்ட இளைஞ ரான இராமநாதன் முரட்டுக் கதர்த் துணியை அணிந்து கொண்டு தாழ்ந்த குடிமக்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஏழை எளியவர்களோடு கலந்து பழகத் தொடங் கிய போது ஊரே வியப்படைந்தது. ஊர் மக்கள் அவரைத் தெய்வமாக நினைத்தார்கள். தெய்வ சந்நிதானத்தில் விளங்கும் திருவிளக்குப் போலச் சீதை என்ற குணவதி அவருக்கு மனைவியாக வாய்த்தாள். தம்மைப் பார்க்கப் பல ஊர்களிலிருந்தும் வருபவர்கள் தங்கு வதற்கு வசதியாக இருக்கட்டும், வளத்திற்கு ஒரு எடுத்துக் காட்டாகத் திகழட்டும், ஊருக்கு பெருமையாக இருக்கட்டும் என்று எண்ணிய இராமநாதன் அழகிய முறையில் மூன்றடுக்குக் கட்டிடம் ஒன்றைக் கட்டினர். அந்த மாளிகையில் கணவனும் மனைவியும் இராமபிரானும் சீதாப்பிராட்டியும் போலவே வாழத் தொடங்கினர். அந்த அன்புத் தம்பதிகளுக்கு ஆண்குழந்தை ஒன்று பிறந் தது, ஊரே மகிழ்ந்தது. அக் குழந்தைக்கு தயாளன் என்று இராமநாதன் பெயர் சூட்டினர். எங்கும் எதிலும் அமைதி நிலைக்க வேண்டும் என்று தான் பெரியவர்கள் விரும்புகிருர்கள். ஆனல் அவ்வாறு எங்கே அமைகிறது?... - - ஒரு நாள், ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் கலந்து கொண்ட இராமநாதன் போலீசாரின் தடியடிக்கு இலக்களுர்-மயங்கி வீழ்ந்தார். பிறகு அவர் பேசவில்லை